ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி செயலகம் (Presidential Secretariat) என்பது இலங்கை சனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகம் ஆகும். இலங்கை அரசியலமைப்பிற்கமைய நிர்வாக மற்றும் நிறுவன கட்டமைப்புடன் கூடிய கடமைகள், பொறுப்புகளை இவ்வலுவலகம் மூலம் இலங்கையின் சனாதிபதி நிறைவேற்றமுடியும்.

ஜனாதிபதி செயலகம்
Presidential Secretariat
இலங்கையின் ஜனாதிபதி செயலகம்
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 1978
ஆட்சி எல்லை இலங்கை அரசாங்கம்
தலைமையகம் பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு
அமைப்பு தலைமை பி. பி. அபயகோன், செயலாளர்
இணையத்தளம்
Official website

ஜனாதிபதி செயலகத்தின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளர் ஆவார். ஜனாதிபதியின் செயலாளரே இலங்கை சிவில் நிர்வாக சேவையின் உயர் பதவியில் இருப்பவர் ஆவார். அத்துடன் இவரே இலங்கை நிர்வாக சேவையின் தலைவரும் ஆவார். தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் பி. பி. அபயகோன் ஆவார்.[1] பழைய நாடாளுமன்றக் கட்டடமே தற்போதைய ஜனாதிபதி செயலகம் ஆகும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.