சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்
சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் (Chaudhary Brahm Prakash Yadav) (1918–1993) இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார். மகாத்மா காந்தியைப் பின்பற்றி ஒத்துழையாமை இயக்கத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.[1][2] சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் வடகிழக்கு தில்லி அருகே சகுர்பூர் எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் | |
---|---|
தில்லியின் முதலாவது முதலமைச்சர் | |
பதவியில் 17 மார்ச் 1952 – 12 பிப்ரவரி 1955 | |
முன்னவர் | புதுப் பதவி |
பின்வந்தவர் | குருமுக் நிகால் சிங் |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தில்லி மாநில முதலாவது முதலமைச்சராக 1952 முதல் 1955 முடிய பதவி வகித்தார்.[3][4] மேலும் இந்திய நடுவன் அரசில் உணவு, வேளான்மை மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் அமைச்சராகவும் பதவி வகித்தவர். சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ், இந்தியக் கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சிகாக ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப் போராடியவர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- The Hindu : New Delhi News : Briefly
- Latest Releases
- "History of Delhi Legislative Assembly". Legislative Assembly of Delhi website.
- "Brahm Prakash: Delhi's first CM, ace parliamentarian". Hindustan Times (27 September 2013). பார்த்த நாள் 2014-01-22.