சைவ இலக்கிய வரலாறு (நூல்)

சைவ இலக்கிய வரலாறு என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய நூலாகும். இந்நூலில் பக்தி இலக்கிய காலம் என்று சிறப்பிக்கப்பெறும் கி.பி 7ம் நூற்றாண்டு முதல் கி.பி 12ம் நூற்றாண்டு வரையான சைவ நூலாசிரியர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுத நினைத்த ஆசிரியர், காலச்சூழலின் காரணமாக கி.பி 10ம் நூற்றாண்டு வரையான நூலாசிரியர்களைப் பற்றி ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார்.

இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் டி. எம். நாராயணசாமி பிள்ளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.

கிபி 700-1000 வரையான தமிழ் நாட்டு வரலாறும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமான், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்தடிகள், சேந்தனார், ஒüவையார், முதற் கண்டராதித்தர், நம்பியாண்டார் நம்பி, வேம்பையர்கோன் நாராயணன் ஆகியோரின் வரலாறும் இடம்பெற்றுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.