சைன ராமாயணம்

சமண இராமாயணம் அல்லது சைன இராமாயணம் சமணர்களால் இயற்றப்பட்டது. சமண சமயத்தின் தலையான காேட்பாடான காெல்லாமையின்படி வாழ்பவனாக இராமனைக் காட்டுகிறது. இராமன் எந்தக் காெலையும் புரியவில்லை எனவும், இலக்குவனே இராவணனையும், மாரீசனையும் கொல்வதாகக் கதை செல்கிறது.[1]

கதை

காசியிலும், அயோத்தியிலும் இருந்துகொண்டு அரசாட்சி புரிந்துவரும் தசரதனுக்கு நான்கு பிள்ளைகள். இந்த ராமாயணத்தின்படி இராவணன் தனக்கு பிறந்த மகளான சீதையால் தனது இராச்சியத்திற்கு அழிவு நேரிடும் என சாதகர்கள் கூறியதனால் வெகு தாெலைவு காெண்டு சென்று விட்டு விடுகிறார். அதன்பின் அவளை வளர்த்த சனக மகாராசா ஏற்பாடு செய்திருந்த சுயம்வரத்திற்குச் சென்ற இராமன் சீதையை மணக்கிறான். காசியில் இருந்த இராமன் இலக்குவன், சீதை ஆகியோருடன் சென்று சித்திரக்கூடத்தில் தங்குகிறார்கள். அங்கு வந்த நாரதரை இராமன் மதிக்காததால் நாரதர் இராவணனிடம் வந்து இலக்குவன் எனும் நடத்தை கெட்டவனுடன் தங்கள் மகளிருப்பதால் அவளுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறியதால் இராவணன் மாரீசனோடு வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். அனுமனைத் தூது அனுப்புகிறான். அவனுடன் சென்ற இலக்குவன் வாலியைக் கொல்கிறான். விபீடனனின் இடைக்கலத்தை ஏற்கிறான். இராவணனையும், மாரீசனையும் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வருகிறான். கொல்லா விரதம் பூண்ட இராமன் சுவர்க்கம் புக, கொலை புரிந்த இலக்குவன் நரகம் புகுகிறான். இது சைன நெறிக்கேற்ப எழுதப்பட்ட கதை.

  • இந்த நூலில் வரும் பாடலின் சில வரிகள்

உரும் இடிப்பு உண்ட அருமணி நாகம் என
திருமணி நிலத்தில் தேவி சோர்ந்து
செய்த பாவையின் மெய் திரிபு இன்றி
மையலின் உயிர்த்து மடிந்து உடன் கிடப்ப
விம்முறு துயரில் ‘கொம்’ என உயிரா
விளைந்தது எல்லாம் உளம் கொள உணரா
எழுது கண் அருவி இனைந்து இனைந்து இரங்கலின்
ஒழுகுப் பொழிய முழுகிய மேனியள்
அழுது அழுது அரற்றி ஆ ஓ என்னும்
இணை பிரி அன்றிலின் ஏங்கி நீங்கா
துணாவனை நினைத்துச் சோகம் மீது ஊர்தர
வான் பழி சுமந்த நின் வன மலர்ச் சேவடி
யான் பிரிந்து ஏது இலன் இடவயின் இடர்ப்பட
மான் பின் ஏகிய மன்னவனே எனும்;
மாயோன் செய்த மாய மானிடை
மாயவன் செய்த மகிழ்ச்சி கண்டு அருளி
ஆவது ஒன்று இன்றி அதன் வழி ஒழுகிய
நாயகனே! எனை நணுகாய் வந்து எனும்

(சிறையில் தனித்திருந்த சீதையின் நிலையைப் பாடும் பாடல் பகுதி) (ஆசிரியப்பா)

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. சு. வையாபுரிப்பிள்ளை. காவிய காலம், பக்கம் 19, மேற்கோள் குறிப்பு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.