சேவை உட்கட்டுமானம்

சேவை உட்கட்டுமானம் (Infrastructure as a Service) என்பது வன்பொருள் உட்பட அனைத்துச் சேவைகளையும் கொளுவுக்கணிமை கொள்கைகளை பயன்படுத்தி வழங்கப்படும் சேவை ஆகும். இது வட்டு சேமிப்பு மற்றும் மெய்நிகர் சேவையகத்தை உள்ளடக்கியது.

அறிமுகம்

பெரும்பாலான கொளுவுக்கணிமை முறையில், சேவை வழங்குநர் கணிப்பொறி, மெய்நிகர் சேவை, வட்டு சேமிப்பு மற்றும் பல வளங்களை உடன் வழுங்குகின்றனர்.

அவ்வாறு வழங்கப்படும் மெய்நிகர் கணினிகளில் Xen அல்லது KVM அல்லது நிகரான மெய்நிகராக்கிகளை (ஹைப்பர்வைசர்களை) பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பல்லாயிரக்கணக்கான மெய்நிகராக்கிகளை மேலாண்மை செய்ய தேவையான சேவைகளையும், சேவை உள்கட்டுமானம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி இவ்வாறு மெய்நிகராக்கம் செய்யும் படிமங்களை உலாவுவதற்கான தனி நூலக வசதி (virtual machine image library) மற்றும் கோப்புகளை பதிவு செய்யும் வசதி, ஐபி முகவரி, மென்பொருட்கள் என அனைத்து வசதிகளையும் இச்சேவை உள்ளடக்கியது ஆகும்.

சேவை வழங்குநர்

அமேசான் EC2, அமேசான் S3, இராக்ஸ்பேஸ், கூகிள் கம்ப்யூட் இஞ்சின் போன்ற முன்னணி கொளுவுக்கணிமை விற்பனையாளர்கள் இந்த சேவையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.