சேணை தொட்டு வைத்தல்

சேணை தொட்டு வைத்தல் பிறந்த குழந்தையின் நாவில் இனிப்புச் சுவையுடைய நீர்மத்தினை வைக்கும் இந்து சமய சடங்காகும். சேணை வைக்க பெரும்பாலும் தேனும், பாலுடன் கலந்த நெய்யும் பயன்படுத்தப்படுகின்றன. [1] சேணை வைக்க இனிப்பு கலந்த தண்ணீரையும் பயன்படுத்துகின்றார்கள். [2] இச்சடங்கினை சேனை வைத்தல், சேனை தொடுதல் என்றும் அழைக்கின்றர். வடமொழியில் மேதா ஜனனம் என்கின்றனர்.

தங்க மோதிரம் போன்றவற்றை சிலமுறை தேய்த்து அதில் தேன் கலந்து தருவதும் உண்டு. பசு நெய், தேன் ஆகியவற்றை கலந்து தங்கம் அல்லது வெள்ளி கிண்ணத்தில் வைத்து ஒரு தங்கத்துண்டினை (மோதிரம் போன்றவற்றை) அழுத்தி உரைத்து குழந்தைக்கு ஊட்டுகின்றனர். [3]

சடங்கிற்கான காரணம்

சேணை என்ற சொல்லுக்கு புத்தி என்ற பொருளாகும்.[4] சேணை தொட்டு வைக்கும் பெரியவரின் குணத்தினை அக்குழந்தையும் பெற்று வாழ்வில் சிறக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் இந்த சடங்கு நடத்தப்படுகிறது. [5]

இந்தச் சேனை தொடுதல் என்பது என்பது சேய்+நெய்+தொடுதல் என்பதன் திரிபாக கருதப்படுகிறது. [6]

சடங்கினைச் செய்ய தேர்ந்தெடுத்தல்

குடும்பத்திலுள்ளோர்களின் குணநலன்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து சேனை வைப்போர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தோரும், வாழ்க்கையில் அதிகப்படியான இன்பங்களை சந்தித்தவர்களுர்களுக்கும் தேர்ந்தெடுக்கும் போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

  1. பிறந்தவுடன் குழந்தையைப் பராமரிக்கும் முறைகள்- தினமணி நாளிதழ்
  2. சேணை தொட்டு வையுங்கள்- தினமலர் கோவில்கள்
  3. ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிறந்த குழந்தை அறிவாளியாக வளர! தினமணி 15 மே 2015
  4. அகராதி
  5. சேணை தொட்டு வையுங்கள்- தினமலர் கோவில்கள்
  6. வாழ்க்கை வட்டச் சடங்குகள் தமிழாய்வு தளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.