சேதிராயர்

சேதிராயர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.

சேதி நாடு

தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார்.[1] சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர்.

சிவ பக்தி

மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் சிவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.[1]

காலம்

இவர் முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தவராகவோ, அதற்குப் பிற்பட்ட காலத்தவராகவோ இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]

மேற்கோள்கள்

  1. உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.