சேதனப் பசளை

இலங்கையிற் பெரும்பாலும் விளைச்சல் முடிந்ததும் தீவைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் தீவைத்தால் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருந்தால் அவை வெடிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். மிதிவெடி அபாயக் கல்வியில் தீவைப்பதை இயன்றவரை தவிர்த்துக் சேதனப் பசளை ஆக்கும் வண்ணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்குக் காரணங்களாவன, தோட்டம் அல்லது வயலில் உள்ளதை எரித்தால் பொட்டாசியம் மிஞ்சும். காலப்போக்கில் மக்னீசியம் குறைபாடும் பயிர்களுக்கு ஏற்படலாம். பயிர்களுக்கு வேண்டிய நைதரசனை மண்ணில் இருந்து பெற்றுக்கொள்ள மண்ணின் காபனுக்கும் நைதரனுக்கும் உள்ள விகிதாசாரம் பங்களிப்புச் செலுத்துகிறது. காபன் கூடினால் பயிர்கள் உள்ளெடுக்கும் நைதரனின் அளவு குறையும். எரிப்பதால் காபனின் அளவு கூடும், இலை குழைகளில் உள்ள நைதரசனும் ஆவியாகி விடும். செயற்கை பசளைகள் பாவித்தால் கூட காபன் கூடிய நிலைப்பகுதியில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதைக்குறைக்க சேதனைப் பசளைகள் தயாரித்துப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.