சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு

சேக் சயத் அரங்கு (Sheikh Zayed Stadium, அரபு மொழி: ملعب الكريكيت الشيخ زايد) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] முதலாவது ஆட்டம் இங்கு இசுக்காட்லாந்துக்கும், கென்யாவுக்கும் இடையே முதல்-தரப் போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.

சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு
Sheikh Zayed Cricket Stadium
ملعب الكريكيت الشيخ زايد
அரங்கத் தகவல்
அமைவிடம்அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள்24°23′47″N 54°32′26″E
உருவாக்கம்2004
இருக்கைகள்20,000
இயக்குநர்பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்பாக்கித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
வடக்கு எல்லை
கூடார எல்லை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு20–24 நவம்பர் 2010:
 பாக்கித்தான் v  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு28 அக்டோபர் – 2 செப்டம்பர் 2017:
 பாக்கித்தான் v  இலங்கை
முதல் ஒநாப18 ஏப்ரல் 2006:
 பாக்கித்தான் v  இந்தியா
கடைசி ஒநாப21 செப்டம்பர் 2018:
 ஆப்கானித்தான் v  பாக்கித்தான்
முதல் இ20ப10 பெப்ரவரி 2010:
 ஆப்கானித்தான் v  இசுக்காட்லாந்து
கடைசி இ20ப27 அக்டோபர் 2017:
 பாக்கித்தான் v  இலங்கை
As of 21 செப்டம்பர் 2018
Source: கிரிக்கின்ஃபோ

பன்னாட்டுப் போட்டிகள்

2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". பார்த்த நாள் 15-09-2015.
  2. "India bat in Abu Dhabi charity match against Pakistan" (10 June 2008). பார்த்த நாள் 8-09-2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.