செல்வக்கனி முஹம்மது யூனூஸ்

செல்வக்கனி முஹம்மது யூனூஸ் (Selvakkani Mohamed Yoonus, பிறப்பு: டிசம்பர் 25, 1924) ஹொங்கொங் வாழ் தமிழர் சமூகத்தால் மூத்தப் பிரமுகராக மதிக்கப்படும் ஒருவராவர். [1]இவர் தமிழ் மொழி ஆர்வலரும், ஹொங்கொங் தமிழ் சமுதாயத்தின் தமிழ்மொழி சார்ந்த முன்னெடுப்புக்களுக்கு முதன்மையாய் நின்று பங்காற்றுபவரும் ஆவர். அத்துடன் ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம், இந்திய முஸ்லீம் சங்கம் முதலான அமைப்புளை நிறுவியவர்களுள் ஒருவர்.

செ. முஹம்மது யூனூஸ்
முஹம்மது யூனூசின் "எனது பரமா குறிப்புகள்" எனும் நூலின் முகப்பு அட்டை.
பிறப்புதிசம்பர் 25, 1924 (1924-12-25)
பர்மா
இறப்புசெப்டம்பர் 24, 2015( 2015-09-24)
இருப்பிடம்ஹொங்கொங்
பணிவணிகம்
பெற்றோர்ச.நெ. செல்வக்கனி ராவுத்தர்,
முஹம்மது பாத்திமா
வாழ்க்கைத்
துணை
பாத்திமா ஜொஹரா
பிள்ளைகள்நாஸீர், சபியா, கரிமா

வாழ்க்கைக் குறிப்பு

முஹம்மது யூனூஸ் பர்மாவில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவரது பள்ளிக்கல்வி தடைப்பட்டது. தமிழ், ஆங்கிலம், பர்மீயம் ஆகிய மொழிகளைச் சொந்த முயற்சியில் கற்றார். நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக்-இல் கிளைச் செயலாளராகப் பணியாற்றினார். அகில பர்மா தமிழர் சங்கம் முதலான அமைப்புகளில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். பர்மாவிலிருந்து வெளியான தொண்டன் பத்திரிக்கையில் பத்திகள் எழுதியிருக்கிறார். ரங்கூனில் பயண முகவாண்மையகம் நடத்தி வந்தார். பர்மாவில் இந்தியர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்கள் மிகுந்த போது, 1966ல் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தார். அது முதல் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், இந்திய முஸ்லீம் சங்கம் முதலான அமைப்புளை நிறுவியவர்களுள் ஒருவர்.

புத்தகம்

அவரது பர்மிய அனுபவங்களை “எனது பர்மா குறிப்புகள்” என்ற புத்தகம் மூலம் தமிழ் உலகத்திற்கு இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவில் மக்களின் நிலை பற்றி வெளியிட்டார். இதை திரு. மு. இராமநாதன் அவர்கள் தொகுத்தளித்தார். இந்நூல் 2009, டிசம்பர் 31 ஆம் திகதி சென்னையில், காலச்சுவடு அரங்கத்தில் வெளியிடப்பட்டது. யூனஸ் தனது பர்மா வாழ்க்கைக் கதைகளை சொல்லச் சொல்ல, அவற்றை ஒலிப்பதிவு செய்து, பின்னர் அதனை முறையாகத் தொகுத்தே இந்நூல் உருவாக்கம் பெற்றது.[2][3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.