செர்கேய் பிளாசுக்கோ

செர்கேய் நிகோலாயெவிச் பிளாசுக்கோ (Sergey Nikolaevich Blazhko, உருசியம்: Сергей Николаевич Блажко, நவம்பர் 17 [யூ.நா. நவம்பர் 5] 1870 - பிப்ரவரி 11, 1956, மாஸ்கோ) சோவியத், உருசிய வானியலாளரும், சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் உயர் உறுப்பினரும் ஆவார் (1929). இவர் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[1] இவர் அப்பல்கலைக்கழகத்தில் மாஸ்கோ வான்காணகத்தின் தலைமை உட்பட பல பதவிகளில் 1920 முதல் 1931 வரை வகித்தார்.[2] இவர் சில RR வகை இலைரே விண்மீன்களின் அலைநேரத்திலும் வீச்சிலும் அமையும் துணை வேறுபாடுகளைக் கண்டுபிடித்தார். இன்று இது பிளாசுக்கோ விளைவு என அழைக்கப்படுகிறது.

இவர் 1952 இல் சோவியத் ஒன்றிய அரசுப் பரிசையும் இருமுறை இலெனின் பட்டயங்களையும் வேறு இரண்டு பட்டயங்களையும் பல பதக்கங்களையும் பெற்றுள்ளார். நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் இவர் பெயரால் பிளாசுக்கோ குழிப்பள்ளம் எனப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58173.html. பார்த்த நாள்: August 22, 2012.
  2. Kulikovsky, P.G. (1970–80). "Blazhko, Sergei Nikolaevich". Dictionary of Scientific Biography 2. நியூயார்க்: Charles Scribner's Sons. 195-197. ISBN 978-0-684-10114-9.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.