செய்யிது சமாலுதீன்
செய்யது ஜமாலுதீன் அல்லது மாலிக்குல் இஸ்லாம் சுல்தான் செய்யது ஜமாலுதீன் என்பவர் அரபுலகில் இருந்து தமிழகத்தின் காயல்பட்டினத்திற்க்கு வந்த வணிக குழுவின் தலைவராவார்.
இவர் இறைத்தூதர் முஹம்மது நபியின் வழித்தோன்றல் என அறியப்படுகிறார் இவர் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர் ஆவார்
பாண்டிய நாட்டின் தூதுவராக சீனம் சென்றிருந்த இவர் வரும் வழியில் மரணமடைந்தார் இவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது
இவரது குடும்பத்தினர் பாண்டியநாட்டின் அரசவையில் செல்வாக்குடன் திகழ்ந்தனர் இவரது ஆட்சிக்காலத்தில் தலைநகரை மதுரையிலிருந்து காயல்பட்டினத்துக்கு மாற்றினார்
பாண்டிய மன்னர்களின் குதிரை படைக்கு தேவையான குதிரைகளை ஒரு குதிரைக்கு 220 தினார் வீதம் ஆண்டுக்கு ஆயிரத்து 400 குதிரைகளை தருவித்து கொடுத்தார்.
இவரின் வழித்தோன்றல்கள் இன்றும் காயல்பட்டினத்தில் வசித்து வருகின்றனர்.[1]