சென்னைத் திரைப்படக் கல்லூரி
சென்னை அடையாறு பகுதியில் அரசு திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அதற்கான தேர்வுக்குப் பின்பு நடிப்பிற்கான சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும் கதை , ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு , இயக்கம் போன்ற திரைப்படம் சார்ந்த சில பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளின் கீழாக திரைப்படத் தொழில்நுட்பப் பட்டயச் சான்றிதழ் (Diploma in Film Technology - D.F.T) அளிக்கப்படுகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.