சென்னை மாகாணத்தின் மக்கள்தொகையியல்

1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 183637 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851-52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கத்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 185657, 186162 மற்றும் 186667 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 186162 இல் 22,857,855 ஆகவும் 186667 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.[1]

பசுமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களும் ஆய்வாளரும் (1911)

பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின் படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.[2]


சென்னை மாகாணத்தின் மாவட்டங்களும் முகமைகளும்
மாவட்டம் மாவட்டத் தலைநகரம் பரப்பளவு (ச.மைல்) இணைந்த ஆண்டு மக்கள்தொகை
1871 1881 1891 1901 1911 1921 1931 1941
அனந்தபூர் அனந்தபூர் 5,557 1800 741,255599,899727,725788,254963,2231,166,255
பெல்லாரி பெல்லாரி 5,714 1800 911,755726,275880,950947,214969,436
செங்கல்பட்டு சைதாப்பேட்டை 5,079 1763 938,184981,3811,202,9281,312,1221,321,000
கோயமுத்தூர் கோயமுத்தூர் 7,860 1799 1,763,2741,657,6902,004,8392,201,752
கடப்பா கடப்பா 8,723 1800 1,351,1941,121,0381,272,0721,291,267
கிழக்கு கோதாவரி[3] காக்கினாடா 1765 ------1,756,4771,976,743
கஞ்சாம்[4] பிரம்மபூர் 8,372 1765 1,520,0881,749,6041,896,8032,010,256-
கோதாவரி[3] காக்கினாடா 7,972 1765 1,592,9391,791,5122,078,7822,301,7591,530,0002,583,250--
கிருஷ்ணா மச்சிலிப்பட்டினம் 8,498 1765/1801 1,452,3741,548,4801,855,5822,154,8031,997,535
கர்நூல் கர்நூல் 7,878 1800 914,432678,551817,811872,055889,000
சென்னை சென்னை 27 1639 367,552405,848452,518509,346518,660526,000645,000776,000
மதுரை மதுரை 8,701 1761/1790/1801 2,266,6152,168,6802,608,4042,831,2801,861,000
மலபார் கோழிக்கோடு 5,795 1792 2,261,2502,365,0352,652,5652,800,5553,015,119
நெல்லூர் நெல்லூர் 8,761 1781 1,376,8111,220,2361,463,7361,496,9871,296,000
நீலகிரி உதகமண்டலம் 958 1799 49,50191,03499,797111,43780,000
வட ஆற்காடு சித்தூர் 7,386 1781/1801 2,015,2781,817,8142,114,4872,207,7121,822,000
சேலம் சேலம் 7,530 1792 1,966,9951,599,5951,962,5912,204,9741,766,680
தென் ஆற்காடு கடலூர் 5,217 1781/1801 1,755,8171,814,7382,162,8512,349,8942,272,000
தெற்கு கனரா மங்களூர் 4,021 1799 918,362959,5141,056,0811,134,713
தஞ்சாவூர் தஞ்சாவூர் 3,710 1799 1,973,7312,130,3832,228,1142,245,0292,362,639
திருநெல்வேலி திருநெல்வேலி 5,389 1761/1801 1,693,9591,699,7471,916,0952,059,607
திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 2,632 1781/1801 1,200,4081,215,0331,372,7171,444,770
விசாகப்பட்டினம் வால்ட்டர் 17,222 1794 2,159,1992,485,1412,802,9922,933,6502,231,874
மேற்கு கோதாவரி[3] ஏலூரு 1765 ------
மொத்தம் சென்னை 141,705 31,220,97330,827,21835,630,44038,209,43641,870,16042,794,15546,740,107[3]49,341,810[4]
சென்னை மாகாணத்தின் மன்னர் அரசுகள் (சமஸ்தானங்கள்)
பங்கனப்பள்ளி பங்கனப்பள்ளி 255 45,20830,75434,59632,264
கொச்சி கொச்சி 1,362 601,114600,278722,906812,025979,080918,1101,205,0161,422,875
புதுக்கோட்டை புதுக்கோட்டை 1,100 316,695302,127373,096380,440411,886426,313400,694
சந்தூர் சந்தூர் 161 14,99610,53211,38811,200
திருவிதாங்கூர் திருவனந்தபுரம் 7,091 2,311,3792,401,1582,557,7362,952,1573,428,9754,006,0625,095,9736,070,018
சான்று: இந்திய வேந்திய அரசிதழ் (The Imperial Gazetteer of India)


நகரங்கள்

இடம் 1871 1881 1891 1901 1911 1921 1931 1941
1சென்னை(367,552)சென்னை(405,848)சென்னை(452,518)சென்னை(509,346)சென்னை(526,911)சென்னை(777,481)
2திருச்சி (76,530)திருச்சி(84,449)திருச்சி(90,609)மதுரை (105,984)மதுரை (138,894)மதுரை (239,144)
3தஞ்சாவூர் (52,171)மதுரை(73,807)மதுரை(87,428)திருச்சி(104,721)திருச்சி(120,422)திருச்சி(159,566)
4மதுரை (51,987)கோழிக்கோடு (57,085)சேலம்(67,710)கோழிக்கோடு (76,981)கோழிக்கோடு (82,334)கோவை (130,348)
5பெல்லாரி(51,766)தஞ்சாவூர் (54,745)கோழிக்கோடு (66,078)சேலம் (70,621)கோவை (65,788)சேலம்(129,702)
6சேலம் (50,012)நாகப்பட்டினம் (53,855)பெல்லாரி (59,447)கும்பகோணம் (59,673)கும்பகோணம் (60,700)
7நாகப்பட்டினம் (48,525)பெல்லாரி (53,460)நாகப்பட்டினம் (59,221)பெல்லாரி (58,247)தஞ்சாவூர் (59,913)
8கோழிக்கோடு (48,338)சேலம் (50,667)தஞ்சாவூர் (54,390)தஞ்சாவூர் (57,870)நாகப்பட்டினம்(54,016)
9கும்பகோணம்(44,444)கும்பகோணம் (54,307)கும்பகோணம் (54,307)நாகப்பட்டினம் (57,190)காக்கினாடா (53,348)
10கோவை (35,310)கோவை (38,967)கோவை (46,383)கோவை (53,080)சேலம் (52,244)

குறிப்புகள்

  1. Official Administration of the Madras Presidency, Pg 327
  2. Statesman, Pg 137
  3. In 1925, Godavari district was bifurcated into West Godavari and East Godavari districts
  4. Ganjam district was transferred to the newly-formed province of Orissa in 1936
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.