செடான் பூங்கா அரங்கம்

செடான் பூங்கா (Seddon Park) நியூசிலாந்தின் நான்காவது பெரிய நகரமும் "சிற்றூர் பசுமைத்தன்மை" உடையதுமான ஆமில்டனில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். இங்கு பார்வையாளர்களுக்கு சிற்றுலா சென்ற உணர்வு ஏற்படுகின்றது. நியூசிலாந்தின் கொள்ளளவில் நான்காவது பெரிய துடுப்பாட்ட அரங்கமாகவும் 'உண்மையான' நீள்வட்ட அரங்கங்களில் மூன்றாவது பெரிய அரங்கமாகவும் விளங்குகின்றது. இந்த விளையாட்டரங்கத்திற்கு முன்னாள் நியூசிலாந்தின் பிரதமர் ரிச்சர்டு செடானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செடான் பூங்கா
இடம் ஆமில்டன் சென்ட்ரல், ஆமில்டன், நியூசிலாந்து
அமைவு 37°47′12″S 175°16′27″E
திறவு 1950
சீர்படுத்தது 1999 - ஒளிப்பாய்ச்சு கோபுரங்கள் நிறுவப்பட்டன
உரிமையாளர் ஆமில்டன் நகர மன்றம்
முன்னாள் பெயர்(கள்) வெஸ்ட்பாக்டிரஸ்ட் பூங்கா
குத்தகை அணி(கள்) நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்சு நைட்சு
அமரக்கூடிய பேர் 10,000 நெகிழ்ச்சியுடன் 30 000
பரப்பளவு முழுமையான துடுப்பாட்ட நீள்வட்டம்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.