செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006

ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்.[1] இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள்.[2]

Location of Sri Lanka

கொல்லப்பட்டவர்கள் மாணவர்களே புலிகள் அல்ல

சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்துள்ளன.[1]

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி

கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக 18 கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.

இப்பயிற்சி நெறி "கிளிநொச்சி கல்விவலயத்தால்" ஒழுங்கமைக்கப்பட்டு,"Women's Rehabilitation and Development (CWRD)" நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

இந்த பகுதியில் தரப்பட்ட தகவல்கள் தமிழ்நெற்றின் பின்வரும் ஆங்கில செய்திக்குறிப்பை[2] அடிப்படையாக கொண்டவை. கிளிநொச்சி கல்வி வலயம் (Kilinochchi Education Zone) என்பது மாவட்டத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரச கல்வி அமைச்சின் ஒரு பிரிவாகும்.

இலங்கை அரச இராணுவ பரப்புரை

இலங்கை அரச பேச்சாளர் Keheliya Rambukwella தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்த்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பொறுப்பு

பாடசாலைகள், சிறுவர் அமைப்பு இடங்கள் மீது குண்டுவீச்சு மற்றும் இராணுவ தாக்குதல்களை தவிர்க்க ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாகவே தெரிகின்றது.

இலங்கை அரசின் பொறுப்பு

இலங்கை வான்படை திட்டமிட்டு, துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல, அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற மனித உரிமைகளை மதியா நிலைமையை வெளிக்காட்டியுள்ளது.

பொது கேள்விகள்

  • பங்கர் பாதுகாப்பு செஞ்சோலையில் இருந்ததா?
  • கொல்லப்பட்ட அனைவரும் மாணவிகளா? ஆசிரியர்கள் எவரும் இல்லையா? எப்படி?

செஞ்சோலையில் கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும், பள்ளி மாணவிகள். ஆனால் அவ்விடம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இடம் என்றால், பலியான மாணவிகளில் எத்தனை பேர் செஞ்சோலையை சார்ந்தவர்கள்?

அஞ்சலி

Protests in Toronto

இவற்றையும் பார்க்க

ஆதாரங்கள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Killed students, participants of leadership workshop - Ilankumaran

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.