செங்கை நாள்

செங்கை நாள் அல்லது சிவப்ப்புக் கை நாள் என்பது வருடாந்தம் பெப்ரவரி 12 ஆம் திகதியில் அனுட்டிக்கப்படும் நாள் ஆகும். இந்நாள் சிறுவர்களை இராணுவத்தில் அல்லது போர்களில் அரசியல் தலைமைகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான நாள் ஆகும். போர்வீரச்சிறுவர் பயன்பாட்டிற்கு எதிரான பன்னாட்டு நாள் எனவும் இது அறியப்படுகின்றது.[1] இந்நாளின் முக்க்கிய நோக்கம், போர்ச்சிறுவர்களுக்க்கு ஆதரவு அளித்து, அவர்களை பாதுகாப்பதே ஆகும். அண்மைய வருடங்களில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ருவாண்டா, உகாண்டா, சூடான், கோட் டிவார், மியான்மர், பிலிப்பீன்சு, கொலம்பியா, பலஸ்தீன் ஆகிய நாடுகளில் சிறுவர்கள் போர்வீரர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைக்கு எதிராக, 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைப் பொதுக்கூட்டத்தில் செங்கைநாளை பிரகடனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது..[2]

செங்கை நாள்
Red Hand Day
சீனப் போர்ச்சிறுவன் ஒருவன்
அதிகாரப்பூர்வ பெயர்போர்வீரச்சிறுவர் பயன்பாட்டிற்கு எதிரான பன்னாட்டு நாள்
பிற பெயர்(கள்)சிவப்புக் கை நாள்
நாள்12 பெப்ரவரி
காலம்1 நாள்
நிகழ்வுவருடாந்தம்

மேற்கோள்கள்

  1. On International Day, UN demands end to use of child soldiers in conflict, Office of the Special Representative of the Secretary-General for Children and Armed Conflict
  2. About Red Hand Day Red Hand Day website
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.