செக்கு
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குவலு ஆரம்பத்தில் பயன்பட்டது. ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பாவனையில் உள்ளன.

செக்கு மாடு
செக்கை இயக்குவதற்கு, வழமைதொட்டு மாடு பயன்படுத்தப்பட்டது. தற்போது சில மாற்றங்களுக்குட்பட்டு லான்மாஸ்ரர் பயன்படுகிறது.
1950-ம் ஆண்டிற்கு முன்பு எண்ணெய் எடுப்பதற்கு மர செக்கை பயன்டுத்தினர். தற்போது பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் எடுக்கப்படுகிறது. எனினும் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் செக்கையும் அதனை இழுக்க மாடுகள் பயன்படுத்துவதையும் பார்க்கலாம்.
புண்ணாக்கு
எண்ணெய் வித்துக்களை (எள் (Gingelly) - நல்லெண்ணெய், கடலை (groundnut) - கடலை எண்ணெய், தேங்காய் - தேங்காயெண்ணெய், வேப்பங்கொட்டை - வேப்பெண்ணெய், ஆமணக்கு (Castor) - விளக்கெண்ணெய் இன்னும் பல) செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கின்றனர் . அவ்வாறு எண்ணெய் எடுத்த பின்பு நமக்கு கிடைக்கும் மீதமுள்ள பொருளே புண்ணாக்கு ஆகும். இவற்றில் எள், கடலைப் புண்ணாக்கு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது.
ஆக்கம்
செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை
வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அவரை ஆங்கிலேயர் கோவைச் சிறையில் அடைத்தனர்.
வ.உ.சி. அங்கே செக்கிழுக்க வைக்கப்பட்டார். அதனால் இவருக்கு செக்கிழுத்த செம்மல், செக்கிழுத்த சிதம்பரனார் என்ற பெயரும் ஏற்பட்டது.