சூறாவளி ஹையான்

சூறாவளி ஹையான் (Typhoon Haiyan) என்பது 2013 இல் பிலிப்பீன்சு நாட்டை தாக்கிய வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். அமைதிப் பெருங்கடலில் 2013 நவம்பர் 2 அன்று உருவான இப்புயல் 2013 நவம்பர் 8 அன்று பிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியத் தீவான சமரில் அதிகாலை 4.40 மணியளவில் தாக்கியது.[1]

தாக்கங்கள்

பிலிப்பீன்சு

புயல் பாதிப்பில் சுமார் 7.50 லட்சம் பேர் வீடுகளை இழந்தும், 1,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன [2][3]

ஹையான் புயல் கரையைக் கடந்தபோது, இப்புயலின் மையப்பகுதியில் மணிக்கு 235 கி.மீ. வேகத்திலும், மேலே உந்தும் சக்தி மணிக்கு 275 கி.மீ. வேகத்திலும் வீசியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[4] ஹையான் புயல் கடந்து சென்ற பகுதிகளில் இருந்த 70 முதல் 80 சதவீதம் வரையிலான வீடுகளும், கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஹையான் புயலின் வேகம் அமெரிக்காவில் வீசும் கடும் புயல்களில் 4-ம் வகைக்கு இணையானதாக அமைந்துள்ளது.[5]

இந்தப் புயலால் சுமார் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6,60,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது[6]

வியட்நாம்

வியத்நாமில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீனா

ஹையான் புயல் சீனாவில் கரையைக் கடக்கவிருப்பதால், அந்நாட்டில் செம்மஞ்சள் நிற எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாகும்.

இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கும் 30-ஆவது புயலான ஹையான், இந்த ஆண்டிலேயே அதிகபட்ச வேகம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.[7][8]

நடப்பு செய்திகள்

பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 10000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என நடப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.[9][10][11]

புயல் நிவாரணம்

புயல் நிவாரணப்பணிகளை செஞ்சிலுவை இயக்கம் மேற்கொள்கின்றது.[12][13]

மேற்கோள்கள்

  1. பிலிப்பின்ஸில் ஹையான் புயல் தாக்குதல் தினமணி 09.11.2013
  2. பிலிப்பின்ஸ் புயல்: 1,200 பேர் பலி? தினமணி 09.11.2013
  3. பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 1000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்' பி பி சி
  4. தி இந்து
  5. புயலுக்கு 10,000 பேர் பலியானதாக அச்சம்
  6. ஹையான் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: பிலிப்பின்ஸில் குடிநீர், மருந்து இன்றி மக்கள் அவதி தினமணி 13.11.2013
  7. ஹையான் புயல்: பிலிப்பின்ஸில் 10,000 பேர் சாவு? தினமணி
  8. http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/Typhoon-Haiyan-makes-landfall-in-Vietnam-US-meteorologists/articleshow/25571739.cms
  9. http://www.firstpost.com/world/typhoon-haiyan-death-toll-could-reach-10000-in-philippines-1220783.html
  10. http://www.thehindu.com/news/international/world/10000-feared-dead-as-typhoon-haiyan-hits-philippines/article5334872.ece
  11. புயல்: லட்சக்கணக்கானோர் உணவின்றி தவிப்பு
  12. http://www.redcross.org/news/article/Typhoon-Haiyan-Disaster-Alert?&nbspt
  13. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=67717

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.