சுவாமிநாதம்

சுவாமிநாதம் அல்லது சாமிநாதம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணமும் கூறுவது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லிடைக் குறிச்சி என்னும் ஊரினரான சுவாமிக் கவிராயர் என்பார் இந்நூலின் ஆசிரியர் ஆவார். [1].

அமைப்பு

இயற்றமிழின் ஐந்து இலக்கணங்களும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்னும் ஐந்து பெரும் பிரிவுகளின் கீழ் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு அதிகாரமும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வுட்பிரிவுகள் இந்நூலில் மரபுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இப் பிரிவுகளின் விபரங்கள் பின்வருமாறு:


  1. எழுத்ததிகாரம்: 1. எழுத்தாக்க மரபு 2. பத மரபு 3. புணர்ச்சி மரபு
  2. சொல்லதிகாரம்: 1. பெயர் மரபு 2. வினை மரபு 3. எச்ச மரபு
  3. பொருளதிகாரம்: 1. அகத்திணை மரபு 2. கைக்கோண் மரபு 3. புறத்திணை மரபு
  4. யாப்பதிகாரம்: 1. உறுப்பு மரபு 2. பாவின மரபு 3. பிரபந்த மரபு
  5. அணியதிகாரம்: 1. பொருளணி மரபு 2. சொல்லணி மரபு 3. அமைதி மரபு


இந்நூலில் வெண்பாவாக அமைந்த ஒரு விநாயகர் வணக்கப்பாடலும், தொடர்ந்து திருத்தாண்டகம் என்னும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பாவால் ஆன பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமுமாகப் 11 பாடல்கள் உள்ளன. இவை தவிர நூலில் ஐந்து அதிகாரங்களிலுமாக மொத்தம் 201 பாடல்கள் உள்ளன[2]

குறிப்புகள்

  1. இளங்குமரன், 2009. பக். 403.
  2. சண்முகம், செ. வை. 1975

உசாத்துணைகள்

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
  • சண்முகம், செ. வை. (உரையும், பதிப்பும்), சுவாமிநாதம், 1975


இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.