சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Estádio Olímpico João Havelange, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [iʃˈtadʒw oˈɫĩpiku ˈʒwɐ̃w̃ ɐveˈlɐ̃ʒi]; ழ்சுவா ஹவலாஞ்ஜ் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்}}) பிரேசிலின் இரியோ டி செனீரோவிலுள்ள பல்பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். இது இரியோவின் எஞ்சென்யாவ் டெ டென்ட்ரோ புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெரும்பாலும் காற்பந்தாட்டங்களுக்கும் தடகள விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. போடாபோகோ காற்பந்துச் சங்கத்தின் தாயக விளையாட்டரங்கமாக உள்ளது. 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது தடகள விளையாட்டுப் போட்டிகள் இங்குதான் நடைபெறும்.[2]
நில்டன் சன்டோசு விளையாட்டரங்கம், எஞ்சென்யாவ் | |
அமைவிடம் | இரியோ டி செனீரோ, பிரேசில் |
---|---|
பொது போக்குவரத்து | எஞ்சென்யாவ் டெ டென்ட்ரோ ஒலிம்பிக் நிலையம், சூப்பர்வயா |
உரிமையாளர் | இரியோ டி செனீரோ மாவட்டம் |
இயக்குநர் | போடாபோகோ |
இருக்கை எண்ணிக்கை | 46,931,[2] 60,000 (olympics) |
ஆடுகள அளவு | 105 m × 68 m (344 ft × 223 ft) |
தரைப் பரப்பு | புல் தரை |
Construction | |
கட்டப்பட்டது | 2003–07 |
திறக்கப்பட்டது | 2007, 2016 |
கட்டுமான செலவு | வார்ப்புரு:BRL[3] (ஐஅ$192 million) |
வடிவமைப்பாளர் | கார்லோசு போர்ட்டோ[4] |
குடியிருப்போர் | |
போடாபோகோ,(ஏ சீரியசு) (2007–) |
இந்த விளையாட்டரங்கம் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. எஞ்சென்யாவ் என அமைவிடத்தை ஒட்டி குறிப்பிடப்படுகின்றது. 2015 முதல் இரியோ நகரவை இந்த விளையாட்டரங்கத்தை நில்டன் சான்டோசு விளையாட்டரங்கம் ( Estádio Nilton Santos) என அழைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரேசிலிய காற்பந்து வரலாற்றில் ஒப்பற்ற பாதுகாப்பு வீரராக விளங்கிய நில்டன் சான்டோசு நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது.[5]
மேற்சான்றுகள்
- "Prefeito permite, e Engenhão "vira" Estádio Nilton Santos" (in Portuguese). Terra Brasil. 10 February 2015. http://esportes.terra.com.br/botafogo/prefeito-do-rio-permite-que-engenhao-seja-nomeado-de-estadio-nilton-santos,7d9b46ebab47b410VgnCLD200000b2bf46d0RCRD.html. பார்த்த நாள்: 12 February 2015. "...o nome oficial continua sendo Estádio Olímpico Municipal João Havelange..."
- "João Havelange Sports Complex". Brazilian Olympic Committee. மூல முகவரியிலிருந்து 9 June 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 June 2007.
- Bandeira, Luiza (3 August 2007). "Clube Botafogo administrará estádio olímpico do Engenhão" (Portuguese). Agência Brasil. பார்த்த நாள் 1 July 2015.
- "Engenhão foi inspirado em Niemeyer" (in Portuguese). Lancenet (Microsoft). 30 June 2007. Archived from the original on 27 September 2007. http://web.archive.org/web/20070927025236/http://msn.lancenet.com.br/noticias/07-06-30/118492.stm. பார்த்த நாள்: 10 July 2007.
- Resende, Leandro (25 March 2015). "Troca de nome do Engenhão é rejeitada na Câmara Municipal" (in Portuguese). O Dia. http://odia.ig.com.br/noticia/rio-de-janeiro/2015-03-25/troca-de-nome-do-engenhao-e-rejeitada-na-camara-municipal.html. பார்த்த நாள்: 29 June 2015.