சுருட்டைவிரியன்

புல் விரியன், என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்[2]நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.

சுருட்டைவிரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன(Squamata)
துணைவரிசை: பாம்புகள்
குடும்பம்: நச்சுப்பாம்புகள்
(Viperidae)
துணைக்குடும்பம்: நச்சுப்பாம்பு உள்குடும்பம்
பேரினம்: Echis
இனம்: E. carinatus
இருசொற் பெயரீடு
Echis carinatus
(Johann Gottlob Schneider, 1801)
வேறு பெயர்கள்
  • [Pseudoboa] Carinata - Schneider, 1801
  • Boa Horatta - Shaw, 1802
  • Scytale bizonatus - Daudin, 1803
  • [Vipera (Echis)] carinata - Merrem, 1820
  • [Echis] zic zac - Gray, 1825
  • Boa horatta - Gray, 1825
  • Echis carinata - Wagler, 1830
  • Vipera echis - Schlegel, 1837
  • Echis (Echis) carinata - Gray, 1849
  • Echis ziczic - Gray, 1849
  • V[ipera]. noratta - Jerdon, 1854
  • V[ipera (Echis]. carinata - Jan, 1859
  • Vipera (Echis) superciliosa - Jan, 1859
  • E[chis]. superciliosa - Jan, 1863
  • Vipera Echis Carinata - Higgins, 1873
  • Echis carinatus - Boulenger, 1896
  • Echis carinata var. nigrosincta - Ingoldby, 1923 (nomen nudum)
  • Echis carinatus carinatus - Constable, 1949
  • Echis carinatus - Mertens, 1969
  • Echis carinatus - Latifi, 1978
  • Echis [(Echis)] carinatus carinatus - Cherlin, 1990
  • Echis carinata carinata - Das, 1996[1]

பெயர்க்காரணம்

  • செதில்கள் அதிக அளவில் கீலுடையதாகவும் கீலிணைப்புகளின் ஓரங்கள் இரம்பப்பற்களைப் போல இருப்பதாலும் இப்பாம்பிற்கு இரம்பச்செதில் விரியன் [அ] வாட்செதில் விரியன்- Saw-scaled viper என்ற பெயர் வந்தது.
  • இது சலசலவென்றும் புஸ்ஸென்றும் ஒலிப்பதால் ஊது சுருட்டை, குறட்டைப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது.
  • அழகிய கம்பளம் போன்ற நிறமுடையதால் கம்பள விரியன் என்றும் அழைக்கப்படுகிறது [3]

உடல் தோற்றம்

புல் விரியன்
  • தலை முக்கோண வடிவில் இருக்கும்; அதில் அம்பு வடிவில் வெள்ளைக்குறி காணப்படும். தலை கழுத்தை விடவும் பெரியது. தலையின் மேற்பரப்பிலுள்ள செதில்கள் சிறியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
  • தடிமனான, சிறிய உடலையுடையது.
  • கண் பெரியதாகவும் கண்மணி செங்குத்தாகவும் உள்ளது.
  • வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
E. carinatus பக்கவாட்டில் வளைந்து செல்லுதல்

இயல்பு

  • அளவில் சிறியதாக இருந்தாலும் (45 - 60 செ.மீ.), இதன் நஞ்சு அல்லது நச்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தரப்பட்டால் உடன் தாக்கக்கூடியது; பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களே காரணமாகின்றன.[4]
  • தொந்தரவு தரப்படும்போது, இது தன் உடலை இரு சுருள்களாக எண் 8 வடிவத்தைப் போல சுருட்டிக்கொண்டு அச்சுருள்களை ஒன்றோடொன்று தொடர்ச்சியாக உராய்விக்கும்; அப்போது உப்புக்காகிதத்தைத் தேய்த்தால் உண்டாகும் ஒலி போன்ற சலசலப்பு உரக்கக் கேட்கும்.[3]
  • பெரும்பாலும் இரவில் நடமாடக்கூடியது; காலை வெயிலில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
  • காய்ந்த வெளி, மணல்/பாறைப் பாங்கான சமவெளி/மலை, மலைப்பாங்கான இடத்திலுள்ள பாறைப்பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காண முடியும்.
  • பகலில் பாறைகளுக்கடியில், மரப்பட்டைகளுக்குப் பின்னால், முட்செடிகளின் அடி போன்ற இடங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.
  • பக்கவாட்டில்-வளைந்து செல்லும் ( side-winding ) முறையில் வேகமாக இயங்கும்.
  • மரங்களில் நன்றாக ஏறும்.

உணவு

  • எலிகள், பல்லி/ஓணான்கள், தவளைகள், தேள்கள் மற்றும் பூச்சிகள்.

மேலும் சில இயல்புகள்/குணங்கள்

  • ஆண் பாம்புகள் சண்டையிடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் 4 - 8 வரையில் குட்டிகளை ஈனும். ஈனும் காலம் - ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை.

புல்விரியன் -- படிமங்கள்

இதையும் பார்க்கவும்

பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)

மேற்கோள்கள்

  1. McDisarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
  2. ஆக்ஃசுபோர்டு அகராதி, வைப்பெரிடீ (viperidae) என்னும் சொல்லை 1909 இல் இருந்து ஆங்கிலத்தில் பயன்படுதுவதைக் குறிப்பிடுகின்றது
  3. தமிழ் இணையப்பல்கலையின் கலைக்களஞ்சியம்
  4. Wilderness Survival

தகவலுதவி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.