சுருட்டு
சுருட்டு (cigar) எனப் பொதுவாக அழைக்கப்படும் புகையிலைச் சுருட்டு என்பது உலர வைத்து நொதிக்கச் செய்யப்பட்ட புகையிலை இலைகளின் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு கட்டு ஆகும். இச்சுருட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்கும் போது பெறப்படும் புகை வாயில் இருந்து வெளிவருகிறது.

சுருட்டுக்குப் பயன்படுத்தப்படும் புகையிலை பிரேசில், கமரூன், கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஒந்துராசு, இந்தோனேசியா, மெக்சிக்கோ, எக்குவடோர், நிக்கராகுவா, பனாமா, பிலிப்பீன்சு, புவேர்ட்டோ ரிக்கோ, கேனரி தீவுகள், இத்தாலி, கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சுருட்டு புகைத்தல் எப்போது, எங்கிருந்து ஆரம்பமானது என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. குவாத்தமாலாவில் 10-ஆம் நூற்றாண்டு மாயன் காலத்து புகையிலை இலைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்ட ஒரு சுட்டாங்கல் சட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகைத்தலுக்கு மாயர்கள் பயன்படுத்திய சொல் "சிக்கார்" (sikar) என்பதாகும்.[1]
படையல் பொருளாக
தமிழ்நாட்டில் கருப்பசாமி, முனிசாமி வழிபாட்டில் மற்ற படையல் பொருட்களுடன் சுருட்டையும் சேர்த்து வைப்பர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Altman, Alex (2 சனவரி 2009). "A Brief History Of the Cigar". TIME. http://www.time.com/time/nation/article/0,8599,1869320,00.html. பார்த்த நாள்: 4 சூலை 2013.
வெளி இணைப்புகள்
- Sanford Cigar Collection - RICHES Mosaic Interface
- Cigar Smoker's FAQ – compiled from alt.smokers.cigars
- Cuban Cigar Website – Online Cuban Cigar Encyclopaedia