சுரசுந்தரி

இந்தியக் கலையில், சுரசுந்தரி எனும் வானுலக பெண் அழகு மற்றும் பாலியல் இன்ப உணர்ச்சிகளின் வடிவாக கருதப்படுகிறாள்.[2]

சுரசுந்தரியின் சிற்பம், கஜூரஹோ சித்திரகுப்தர் கோயில்
மனைவி இல்லாத வீடும்; பெண் இல்லாத கேளிக்கையும் போன்று, சுரசுந்தரிகளின் சிற்பங்கள் இல்லாத கோயிலும் பொழிவற்றதாகும்.
Shilpa-Prakasha, 9th century architectural treatise[1]

கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் பௌத்தம் மற்றும் சமணக் கோயில்களில் யட்சினி எனும் பெண்கள் சிற்பங்கள், சுரசுந்தரிக்கு இணையாக உள்ளது.

இந்துக் கட்டிடக் கலையில், சுரசுந்திரியின் சிற்பங்கள், கிபி 9ம் நூற்றாண்டு முதல் அறியப்படுகிறது. கஜூரஹோ சித்திரகுப்தர் கோயில் சுவர்களில் சுரசுந்திரியின் சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது.

மனைவி இல்லாத வீடும்; பெண் இல்லாத கேளிக்கையும் போன்று, சுரசுந்தரிகளின் சிற்பங்கள் இல்லாத கோயில் சிற்பங்களும் பொழிவற்றதாகும் என இந்து சமய சிற்ப சாத்திரகள் கூறுகிறது.[1][3] கிபி 15ம் நூற்றாண்டின் ஷிரார்நவ எனும் சிற்ப நூலில், சுரசுதந்தரிகளின் சிற்பம், கீழ் நோக்கியவாறு அல்லாது, யாரையோ நோக்கியவாறு வடிக்கக் கூடாது எனக்கூறுகிறது.[4]

வடநாட்டு இந்துக் கோயில்களின் மூலவர் மற்றும் அம்பாளின் ஏவல் பெண்களாக சுரசுந்தரியின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரசுந்தரிகள் நடனமாடும் அரம்பையர்கள் போன்று கோயில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.[5]

  • முகம் பார்க்கும் கண்ணாடியை தாங்குபவள்
  • செடியின் கிளையத் தாங்குபவள்
  • தாமரையை முகர்பவள்
  • மலைமாலையை அணிந்தவள்
  • தாய்மை வடிவம்
  • சாமரம் வீசுபவள்
  • நர்த்தகி
  • கிளியுடன் உரையாடுபவள்
  • காலில் கொலுசு அணிந்தவள்
  • மத்தளம் கொட்டுபவள்
  • சோம்பலுடன் கூடியவள்
  • முட்களை களைபவள்

சுரசுந்தரிகளின் சிற்பங்கள் கோயில் சுவர்களில் அழகுடன் வடிப்பது, அந்நாட்டு மன்னர்களின் வளமையைக் காட்டுகிறது.[6]

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.