சுமோ மற்போர்

சுமோ மற்போர் (相撲 Sumō) என்பது இருவர் ஒருவரோடு ஒருவர், முறைப்படி விதிகளுடன் மோதிப் பொருது எதிராளியைக் கீழே தள்ளி மண்ணைத்தொடசெய்து வெற்றி நாட்டும் ஒரு போட்டாபோட்டி ஆகும். இப்போட்டி சப்பான் நாட்டில் மிகவும் புகழ் பெற்றது. இதில் பங்கு கொள்வோர்கள் எதிராளி தங்களை எளிதில் பிடித்துத் தள்ளிவிட இயலாதவாறு இருக்க மிகவும் பருமனாக இருப்பர். திறமை இல்லாமல் பருமனாய் மட்டும் இருந்தால் போதாது. தமிழில் மல் என்றால் திறண்ட, பருமனான என்னும் பொருள் உண்டு என்பது இங்கு நினைக்கத் தக்கது. இப்போரில் பங்குகொள்வோரை சுமோ மல்லர்கள் என்று தமிழில் அழைக்கிறோம். சப்பானியர் தங்கள் மொழியில் சுமோ மல்லர்களை ரிக்கிசி என்றழைக்கின்றனர். இப்போரில் தோறவர்களை செத்த பிணம் என்னும் பொருள் படும் சினி-தை (shini-tai) என்பர். இவ்விளையாட்டுப் போர் தொடங்கும் முன் சப்பானியர் பல சடங்குகளைச் செய்வர். அவற்றுள் சில அவர்களுடைய பழைய மதம் (சமயம்) ஆகிய சிண்டோ மதத் தொடர்பு உடையவை.

சுமோ தொடங்கும் முன் சடங்கு

சுமோ போர் விதிகள்

சுமோ மற்போர் ஒரு வட்ட வடிவ களத்தினுள் புரிவார்கள். இந்தக் களத்தை களிமண்ணாலும் மணலாலும் பரப்பி தரை மட்டத்தில் இருந்து சுமார் 34-60 செ.மீ உயர்த்தில் அமைப்பர். இந்த வட்ட களத்தின் விட்டம் 4.55 மீ. இந்த வட்டக் களத்திற்கு சப்பானிய மொழியில் தோஃயோ ((土俵)) என்று பெயர். களத்தின் சுற்றுவட்டத்தை ஒட்டி வைக்கோலால் ஆன திட்டுக்கள் இருக்கும். இவைகளுக்கு சப்பனிய மொழியில் தவார (tawara (俵)) என்று பெயர். வட்டத்தின் நடுவே இரு வெள்ளைக் கோடுகள் இருக்கும். அக்கோடுக்களுக்குப் பின்னே தான் சுமோ மல்லர்கள் முதலில் நிற்க வேண்டும். இந்த இரு நடுக்கோடுகளுக்குப் பெயர் சிக்கிரி-சென். (shikiri-sen (仕切り線))

இப்போடியில் வெற்றி பெற

  • எதிராளியை முறைப்படி பொருது அவருடைய உடலில் பாதத்தைத் தவிர ஏதாவது ஒரு உறுப்பை களத் தரையில் பட்டுவிடுமாறு பொருத வேண்டும்.
  • களத்தின் வட்டத்தில் இருந்து வெளியேறச் செய்ய வேண்டும்.

இப்போட்டியை நடத்தவும், வென்றவரை அறிவிப்பவரும் ஆகிய நடுவர் ஒருவர் இருப்பர். இப்போட்டிகள் சில நேரங்களில் சில நொடிகளிலேயே முடிந்துவிடும்.

சுமோ களத்தைச் சுற்றி மக்கள் ஆர்வமாக காணும் காட்சி

வரலாறு

1860ல் காட்டப்பட்டுள ஒரு காட்சி

போட்டி மன்றங்களும் போட்டி நிகழ்ச்சிகளும்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.