சுமித்ரா மகஜன்

சுமித்திரா மகஜன் (Sumitra Mahajan, 12 ஏப்ரல் 1943) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.[1] 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.[2] மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[3] 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.

சுமித்ரா மகஜன்
இந்திய மக்களவைத் தலைவர்
பதவியில்
05 ஜூன் 2014  17 ஜூன் 2019
முன்னவர் மீரா குமார்
பின்வந்தவர் ஓம் பிர்லா
இந்தோர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989  29 மே 2019
முன்னவர் பிரகாஷ் சந்திர சேத்தி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஏப்ரல் 1943 (1943-04-12)
சிப்லுன், ரத்னகிரி மாவட்டம்
அரசியல் கட்சி பாஜக
வாழ்க்கை துணைவர்(கள்) ஜயந்த் மகஜன்
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் இந்தோர், மத்தியப் பிரதேசம்
As of 22 செப்டம்பர், 2006
Source:

முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.[4] இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.