சுதாராஜ்

சுதாராஜ் (பிறப்பு: ) சிவசாமி இராஜசிங்கம் இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளாருமாவார். 1972 இல் "ஒளி" என்ற சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாவல், சிறுகதை,சிறுவர் இலக்கியம், இலக்கியத்தில் பல ஆக்கங்களை எழுதி வருகிறார்.

சுதாராஜ்
பிறப்புசிவசாமி இராஜசிங்கம்
நல்லூர்யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ் இந்துக் கல்லூரிமொறட்டுவப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபொறியியலாளர், ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்சிவசாமி-இராசம்மா

வாழ்க்கைக் குறிப்பு

சுதாராஜ் யாழ்ப்பாணம் நல்லூர்யைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன். யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுப் பின்னர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலும் பணிபுரிந்து தற்போது புத்தளத்தில் பணியாற்றுகிறார். அங்கு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார். இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.

சுதாராஜின் முதற் சிறுகதைத் தொகுதி பலாத்காரம் (1977) வெளி வந்தது. இது பின்னர் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. 2002 முதல் தன்னை வளர்த்த சிரித்திரனைக் கௌரவிப்பதற்காக சிரித்திரன் சுந்தர் விருதினை, ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார்.

வெளிவந்த நூல்கள்

  • பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு, 1977)
  • இளமைக் கோலங்கள் (நாவல், வீரகேசரி பிரசுரம், 1981, மணிமேகலைப் பிரசுரம், மீள் பிரசுரம், 2004)
  • கொடுத்தல் (சிறுகதைத் தொகுப்பு, சிரித்திரன் பிரசுரம், 1983, மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம், 2004)
  • ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் வெளியீடு, 1989, மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம், 2003)
  • தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் வெளியீடு, 1997, மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம், 2004)
  • சுதாராஜின் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு, தேனுகா பதிப்பகம், 2000)
  • காற்றோடு பேசுதல் (சிறுகதைத் தொகுப்பு, எம். டி. குணசேன பிரசுரம், 2000), மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம்,2005)
  • காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை (சிறுவர் இலக்கியம், தேனுகாபதிப்பகம், 2000, மணிமேகலை பிரசுரம், 2004)
  • பறக்கும் குடை (சிறுவர் இலக்கியம், தேனுகா பதிப்கம் பிரசுரம், 2001)
  • கோழி அம்மாவும் மயில் குஞ்களும் (சிறுவர் இலக்கியம் பிரசுரம், 2002)
  • குட்டிப் பூனையும் கெட்டிக்காரச் சுட்டிப் பையனும் (சிறுவர் இலக்கியம், NIE&UNHCR பிரசுரம், 2003)
  • மனித தரிசனங்கள் (மணிமேகலை பிரசுரம், 2005)
  • இலங்கை நாட்டுப்புறப் பாடல்கள் (மணிமேகலைப் பிரசுரம்)
  • காட்ட தொஸ பவறமுத (சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் பிரசுரம், 2000)
  • நொபொனனி பத்த (சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு, பிரசுரம், 2000)

விருதுகள்

  • 1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய விருது (கொடுத்தல்)
  • இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம். (கொடுத்தல்)
  • 1989ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருது (ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்).
  • தெரியாத பக்கங்கள் எனும் சிறுகதைத் தொகுப்புக்கு விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது.
  • அடைக்கலம் சிறுகதை ஆனந்த விகடன் வைர விழாப் போட்டியில் 1991இல் பரிசு பெற்றது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.