சுண்டிக்குளி

சுண்டிக்குளி என்பது தற்போது யாழ்ப்பாண நகரின் புறநகர்ப் பகுதியாக உள்ள ஒரு இடத்தின் பெயர் ஆகும். யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இவ்விடம், யாழ் மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுள் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குகின்றது. இது கண்டி வீதி, கொழும்புத்துறை வீதி ஆகிய முக்கியமான வீதிகளை அண்டி அமைந்துள்ளது. பொதுவாகச் சுண்டிக்குளி என அறியப்படும் இடம் சுண்டிக்குளி வடக்கு, சுண்டிக்குளி தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும், ஈச்சமோட்டை, யாழ்ப்பாண நகரம் கிழக்கு ஆகியவற்றுள்ளும் அடங்குகிறது. யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு முன்பே இது ஒரு சிறிய ஊராக இருந்தது. இது ஐரோப்பியரின் யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் அமைந்திருந்ததால் ஒரு மேல் மத்தியதர வகுப்பினர் விரும்பும் ஒரு குடியேற்றப் பகுதியாக வளர்ச்சியடைந்தது. யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான நிர்வாகக் கட்டிடங்களும், பாடசாலைகளும், தேவாலயங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

சுண்டிக்குளி

Chundikkuli

චුන්දිකුලි
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்வடமாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
நேர வலயம்இலங்கை நியம நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியெண்இல்லை

நிர்வாகக் கட்டிடங்கள்

  • யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்

பாடசாலைகள்

மதச்சார்பு நிறுவனங்கள்

குறிப்புக்கள்

    இவற்றையும் பார்க்கவும்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.