சுசிரோ அயாசி

நிகோங்கோ சுசிரோ அயாசி (சப்பானியம்: 林 忠四郎) [ஜூலை 25, 1920 - பிப்ரவரி 28, 2010] ஒரு ஜப்பானிய வானியற்பியலாளர். எர்ட்சுப்பிரங் - இரசல் விளக்கப்படத்தில் உள்ள அயாசித் தடங்கள் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டன.

சுசிரோ ஃஅயாசி
பிறப்புசூலை 25, 1920(1920-07-25)
இறப்புபெப்ரவரி 28, 2010(2010-02-28) (அகவை 89)
கயோட்டோ, ஜப்பான்
தேசியம்ஜப்பான்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கயோட்டோ பல்கலைகழகம்
கல்வி கற்ற இடங்கள்டோக்கியோ பல்கலைகழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
ஃஇடெக்கி யுகாவா
விருதுகள்எடிங்டன் பதக்கம், 1970
கயோட்டோ பரிசு, 1995
புரூசு விருது, 2004

இவர் 1942-ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். பிறகு இவர் இடேக்கி யுகாவாவின் கீழ் ஆய்வு உதவியாளராகக் கயோட்டோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். செவ்வியல் படிமமாகிய ஆல்பெர்–பீதே–காமோவ் ஆய்வின் அணுக்கருத்தொகுப்புப் படிமத்துக்கு கூடுதல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.[1] இவரது மிகவும் பெயர்பெற்ற ஆய்வு விண்மீன் உருவாக்கத்தின் அயாசித்தடங்களைக் கண்டறிய உதவிய வானியற்பியல் கணக்கீடுகளாகும்.[2] இவை விண்மீனின் ஆரத்துக்கு வரம்புகட்டும் அயாசி வரம்பையும் விதித்தன.

இவர்மிகச்சிறிய விண்மீன்களான பழுப்புக் குறளைகளின் தொடக்கநிலை ஆய்வுகளை மேற்கொண்டார்.[3] இவர் 1984-ல் ஓய்வு பெற்றார்.

இவர் 1970-ல் எடிங்டன் பதக்கத்தையும் 1995-ல் கயோட்டோ பரிசையும் 2004-ல் புரூசு விருதையும் பெற்றார்.

சுசிரோ அயாசி கயோட்டோ மருத்துவமனையில், 2010-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் நாள் நிமோனியாக் காய்ச்சலால் இறந்தார்.[4][5]

மேற்கோள்கள்

  1. Hayashi, C. (1961). "Proton-neutron concentration ratio in the expanding Universe at the stages preceding the formation of the elements". Progress of Theoretical Physics 5 (2): 224–235. doi:10.1143/PTP.5.224.
  2. Hayashi, C. (1961). "Stellar evolution in early phases of gravitational contraction". Publications of the Astronomical Society of Japan 13: 450–452. Bibcode: 1961PASJ...13..450H.
  3. Hayashi, C.; Nakano, T. (1963). "Evolution of Stars of Small Masses in the Pre-Main-Sequence Stages". Progress of Theoretical Physics 30 (4): 460–474. doi:10.1143/PTP.30.460. Bibcode: 1963PThPh..30..460H.
  4. Sugimoto, D. (2010). "Chushiro Hayashi 1920–2010". Astronomy & Geophysics 51 (3): 3.36. doi:10.1111/j.1468-4004.2010.51336.x. Bibcode: 2010A&G....51c..36S.
  5. "Award-winning Japanese astrophysicist Hayashi dies at 89". Kyodo News (March 1, 2010). பார்த்த நாள் March 1, 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.