சுகதா போசு

சுகதா  போசு ( Sugata Bose 7, செப்டம்பர் 1956)  என்பவர் இந்திய வரலாற்றாளர், நூலாசிரியர்,  அரசியலாளர் மற்றும் பேராசிரியர் ஆவார். தென் ஆசியா பற்றியும் இந்தியப் பெருங்கடல் பற்றியும் ஆய்வுகள் செய்தவர்.  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாசு சந்திர போசின் தம்பி  பெயரன் ஆவார்.

சுகதா போசு

வாழ்க்கைக் குறிப்புகள்

சுகதா போசு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்துப்  பின்னர்  கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டமும் பெற்றார். 2001 ஆம் ஆண்டு வரை டப்டஸ் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். கடல் வரலாறு குறித்து ஆய்வு செய்ய ஆர்வர்ட்  கார்டினர் பேராசிரியர் பதவியை ஏற்றார்.[1] பிரசிடென்சி பல்கலைக் கழகத்தைத் தரமான பல்கலைக் கழகமாக உயர்த்துவதற்கு ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆனார். கொல்கத்தாவில்    நேதாஜி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.  இவர் 2014 முதல்  திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர். சாத்வ்புர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆய்வுகள் மற்றும் நூல்கள்

காலனிய ஆட்சிக்கால அரசியல் பொருளாதார நிலை,  காலனிய ஆட்சியின் பிந்தைய கால நிலை ஆகியவற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தார். கிராமப்புரம், நகரம்  ஆகியவற்றுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் குறித்தும் பதிவுகள் செய்தார். 'நவீன தெற்கு ஆசியா --வரலாறு பண்பாடு அரசியல் பொருளாதாரம்' என்ற பெயரில் ஒரு நூலை ஆயிசா சலால் என்பவருடன் சேர்ந்து எழுதினார். நூறு தொடுவானம் என்ற நூலில் 2004 திசம்பரில் 26 ஆம் நாளில்  இந்திய பெருங்கடலில்  உருவான  சுனாமி ஏற்படுத்திய மாற்றங்கள் விளைவுகள் பற்றி எழுதியுள்ளார். நேதாஜி சுபாசு  சந்திர போஸின் வரலாறு பற்றியும் அவருடைய போராட்டங்கள் பற்றியும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க

மேற்கோள்

  1. Phillips, Lauren (1 April 2001). "Harvard hires Sugata Bose, Tufts' South Asian center founder". The Tufts Daily.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.