சு. தங்கவேலு
சு. தங்கவேலு (பிறப்பு: டிசம்பர் 17 1946) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். பாவலர் கோவி. மணிதாசன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் விற்பனை முகவராகப் பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் பூக்களம் என்னும் வடமலேசிய எழுத்தாளர் - வாசகர் அமைப்பின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாவலர், கவிமணி, கவிச்சிட்டு, பாயிரப் பாவலர் போன்ற அடைமொழிகள் பெற்றவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இசைப்பாடல்கள், இலக்கிய, சொல் ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "சந்தனப் பூக்கள்" (கவிதைகள், 1992);
- "தமிழ் நானூறு" (கவிதைகள், 1996).
பரிசுகளும் விருதுகளும்
- மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் நடத்திய தேசிய நேர்முகக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு
- கவிதைக் களம் நடத்திய தேசியக் கவிதைப் போட்டியில் இரணடாம் பரிசு
- தமிழ் நேசன் நடத்திய மலேசியத் தந்தை துங்கு பற்றிய கவிதைப் போட்டியில் முதல் பரிசு;
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.