சீனு மோகன்

சீனு மோகன் (Cheenu Mohan) (17 மே 1956 – 27 டிசம்பர் 2018), தமிழ் மேடை நடிகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் மோகன் ஆகும். கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவில் இடம்பெற்றுவந்த மோகன், கிரேசி மோகனின் பல நாடகங்களில் சீனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் ஆனார். [1]சீனு மோகன் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சீனு மோகன்
பிறப்புமே 17, 1956(1956-05-17)
இறப்பு27 திசம்பர் 2018(2018-12-27) (அகவை 62)
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
பணிமேடை நடிகர் / திரைப்பட நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989–2018

நடித்த சில திரைப்படங்கள்

நடித்த சில மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்

  • மர்மதேசம் இரகசியம்
  • மதில் மேல் மாது [2]
  • மேரஜ் மேடு இன் சலூன்
  • மாது பிளஸ் 2

மறைவு

சீனு மோகன் மாரடைப்பால் 27 டிசம்பர் 2018 காலமானார்[3][4][5][6]

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.