சீசர் விருது
சீசர் விருது (César Award) பிரான்சின் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும். 1975ஆம் ஆண்டில் முதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நியமனங்களை திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி (Académie des arts et techniques du cinéma) தேர்ந்தெடுக்கிறது.[1]
சீசர் விருது | |
![]() 2000ஆம் ஆண்டின் சீசர் விருது விழாவின்போது | |
விருதுக்கான காரணம் | சிறந்தத் திரைப்படம் |
வழங்கியவர் | திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி Académie des Arts et Techniques du Cinéma |
நாடு | பிரான்சு |
முதலாவது விருது | 1975 |
அதிகாரபூர்வ தளம் |
---|
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் பாரிசில் உள்ள சாடெலெட் தியேட்டரில் நடைபெறும் விருது வழங்கும் விழா நாடெங்கும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப் படுகிறது.
இந்த விருது 1921 - 1998இல் வாழ்ந்த சிற்பக்கலைஞர் சீசர் பால்டச்சினி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் விருதுகள் இந்தக் கலைஞரின் சிற்பங்களின் படியாகும். இந்த விருதுகள் அமெரிக்காவின் ஆசுகார் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.