சிவபுண்ணியத் தெளிவு
சிவபுண்ணியத் தெளிவு என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான தேசிகர் என்பவரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று. சிவபுண்ணியச் செயல்களையும் அவற்றால் விளையும் பலன்களையும் இந்த நூல் விளக்குகிறது.
இது காப்பு உள்பட 145 பாடல்களைக் கொண்ட நூல்.
எடுத்துக்காட்டுப் பாடல்
ஓது முப் பொருளையும் உணர்ந்து நால் பதத்து
ஆதி ஆகமம் தழீஇ அதனைப் பன்னிரு
போத சூத்திரம் அதாப் புகன்ற நந்தி தன்
பாத பங்கய மலர் பணிந்து போற்றுவாம்
சிவபுண்ணியங்களாக இந்நூல் குறிப்பிடுவனவற்றுள் சில
- சிவாலயத்தை வழிபடல், நந்தவனம் வைத்தல், பசு வளர்த்தல், சிவயோகிகளுக்கு இடுதல், குருலிங்க வழிபாடு முதலானவை
- வணக்கம், திருநீறு அணிதல் முதலான பல புண்ணிய செயல்களின் பலன் விரிவாகத் தனித்தனியே கூறப்பட்டுள்ளன.
இந்நூல் வெளிவந்த பதிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத் தக்கவை
- உலகநாத முதலியார் பார்வை 1925
- திருவாடுதுறை ஆதீனம் 1954
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.