சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், இயக்குனர் செல்லா இயக்கி 2018ல் வெளிவந்த இந்திய தமிழ் அதிரடி நகைச்சுவை படம்.[1] விஷ்ணு விஷால் ஹீரோவக நடித்து தயாரித்த இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ராவுடன் இவர் நடித்துள்ளார்.[2] இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படம் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது. இது 21 டிசம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது. வெளியானதும் இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

கதாப்பாத்திரங்கள்

விஷ்ணு விஷால் - சத்தியமூர்த்தி அல்லது சத்தி, சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள், அவர் துணை ஆய்வாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா - ராஜேஸ்வரி (ராஜி), சத்தியின் காதல் ஆர்வம்

ஓவியா - கனகா (நீட்டிக்கப்பட்ட கேமியோ தோற்றம்), மணமகனைக் கடத்திச் செல்ல ஷங்கரை கையாள சக்திக்கு உதவும் ஒரு நடனக் கலைஞர்

பி. ரவிசங்கர் - சைக்கிள் ஷங்கர், சென்னையில் ஒரு பயங்கரமான ரவுடி மற்றும் டான்

ஆனந்தராஜ் - "ஷேர் ஆட்டோ" சந்திரன். அவர் ஷங்கர், சத்தி, ராஜி, நாராயணனின் ஆட்கள் மற்றும் ஷங்கரின் ஆட்களால் துரத்தப்படும் ஒரு மனிதர்.

யோகி பாபு - டோனி. சங்கரின் வலது கை மனிதன். அவர் நாராயணனைக் கடத்தி லாரியின் பின்புறத்தில் வைத்திருப்பார்.

கருணாகரன் - பி.சி.பாஸ்கர், புதிய கான்ஸ்டபிள்

மன்சூர் அலி கான் - நிலக்கோட்டை நாராயணன்

ஆடுகளம் நரேன் - ஆணையர் பன்னீர்செல்வம்

சுவரொட்டி நந்தகுமார் - அமைச்சர் ஆறுமுக பெருமாள்

ஜி.மாரிமுத்து - ராமலிங்கம்

சவுண்தரராஜன் - ராஜபாண்டி

வடிவுக்கரசி - சத்தியமூர்த்தியின் பாட்டி

O. A. K. சுந்தர் - கண்காணிப்பாளர் ஏ.ராகவன்

"பேரழகி" காயத்ரி ராஜ் - சினேகா

சிங்கமுத்து

லொல்லு சபா மனோகர்

காதல் சரவணன்

தயாரிப்பு

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ஆர்யன் ஆகியோர் இணைந்து விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் டர்மரிக் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் தயாரித்தனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது. இப்படத்தின் படத் தொகுப்பாளர் லிவிங்ஸ்டன் ஆண்டனி ரூபன் ஆவார். இப்படத்தின் ஒளிப்பதிவு ஜே. லக்‌ஷ்மன் செய்துள்ளார்.

பட வெளியீடு

உரிமங்கள்

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஸ்டார் விஜய்க்கு விற்கப்பட்டன. இது 21 டிசம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது.

விமர்சனங்கள்

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா இப்படத்திற்கு 3/5 மதிப்பென் வழங்கியது.[4] சைஃபி மூவிஸ் 3.5/5 மதிப்பென் வழங்கியது.சைஃபி தனது விமர்சனத்தில் "நீங்கள் ஒரு நல்ல சிரிப்பைத் தேடுகிறீர்களானால், சிலுக்குவார்பட்டி சிங்கம் உங்களை திருப்திப்படுத்துவது உறுதி" என்றது. பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனம் 2.5/5 மதிப்பென் வழங்கியது.[5] ஐ. எம். டி. பி 5.3/10 மதிப்பென் வழங்கியது.[6] இந்தியா கிலிட்ஸ் நிறுவனம் 2.5/5 மதிப்பென் வழங்கியது. [7]

இசை

இப்படத்திற்கு இசை அமைத்தவர் லியோன் ஜேம்ஸ்.

டியோ டியோ ரியா - சுனிதி சவுகான், நரேஷ் ஐயர், சந்தோஷ் ஹரிஹரன் - 4:44

மயக்காத - சுதர்ஷன் அசோக் - 4:25

ஏய் டம்மி - பட்டாசு பாம்பா பாக்கியா - 4:32

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சர்கம் கொயர், வைக்கோம் விஜயலட்சுமி - 3:34

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.