சிலவர் ஆட்சி

சிலவர் ஆட்சி அல்லது சிறுகுழு ஆட்சி (Oligarchy, கிரேக்க மொழி ὀλιγαρχία (oligarkhía); ὀλίγος (olígos), பொருள் "சிலர்", மற்றும் ἄρχω (arkho), பொருள் "ஆள்வது அல்லது ஆணையிடுவது")[1][2][3] என்பது அரசியலமைப்பில் அரசியல் அதிகாரம் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களின் கையில் இருப்பதாகும். இச்சிறுகுழுவினர் அரச குடும்பம், செல்வந்தர்கள், உறவினர்கள், கல்வியாளர்கள், நிறுவனங்கள், படைத்துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். இந்த நாடுகளில் ஆட்சி புரியும் சிறு குடும்பங்கள் தங்கள் அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கும் தக்க வைத்துக் கொள்வர். இருப்பினும் வாரிசுரிமை அல்லது மரபுரிமை இத்தகைய ஆட்சிமுறையை விவரிக்கத் தேவையான பண்புகளில் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.

ஓலிகார்க்கி, என்ற தமது 2011ஆம் ஆண்டு நூலில் ஆசிரியர் ஜெஃப்ரி ஏ. வின்டர்சு இவ்வாறு வரையறுக்கிறார்: "பொருளால் உரிமைபெற்ற நபர்களின் செல்வத்தைக் காக்கும் அரசியல்." வின்டர்சின் வரையறைப்படி பெருஞ்செல்வத்தைக் கைப்பற்றியமையே ஆட்சிக்குழுக்களை அடையாளம் காண முடிவான காரணமாகும். இருப்பினும் சில அதிகார மையங்கள் நேரடியாக தங்கள் சமூகங்களை ஆள்வதில்லை; ஒரு இடைத்தரகரைக் கொண்டும் ஆளவியலும்.

வரலாறு முழுமையுமே, சிலவர் ஆட்சிகள் சர்வாதிகாரத் தன்மையுடனோ (பொதுக் கீழ்படிதல்/அல்லது ஒடுக்கப்படுதல்) ஒப்புமையில் நல்லாட்சி வழங்குவனவாகவோ இருந்துள்ளன. அரிசுட்டாட்டில் செல்வந்தர்களால் ஆள்வதற்கு இணையான சொல்லாக ஓலிகார்க்கி என்ற சொல்லை உருவாக்கினார்,[4] ஆனால் செல்வந்தர்களால் ஆட்சி புரியப்படுவது புளூட்டிகிராசி என குறிப்பிடப்படுகிறது. ஓலிகார்க்கி என்பது எப்போதுமே செல்வந்தர்களால் ஆளப்படுவதைக் குறிப்பதில்லை; இது முன்னுரிமை பெற்ற குழுவினால் ஆளப்படுவதைக் குறிக்கிறது. இக்குழு முடியாட்சி போல குருதியால் உறவுடையவர்களாக இருக்க வேண்டியதில்லை.

மேற்சான்ற்கள்

  1. ὀλίγος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  2. ἄρχω, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  3. ὀλιγαρχία, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  4. Winters (2011) p.37
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.