சிற்றூர்தி

சிற்றூர்தி (Van) என்பது பொருட்களையும் மக்களையும் கொண்டு செல்லும் ஊர்தி ஆகும்.[1]

கார்லைலில் சுற்றுக்காவல் புரியும் பிரித்தானியக் காவற்றுறைச் சிற்றூர்தி

பெயர் விளக்கம்

சிற்றூர்தியின் ஆங்கிலப் பெயரான Van என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் Caravan என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.[2]

இந்தியாவில்

இந்தியாவில் சிற்றூர்தி மூலம் பயணஞ்செய்தல் பொதுவான பயணஞ்செய்யும் முறைகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்வதற்குச் சிற்றூர்தி பயன்படுத்தப்படுகின்றது.

பயன்பாடுகள்

ஐக்கிய அமெரிக்காவின் நகரப் பகுதிகளில் முழு அளவுச் சிற்றூர்திகள் 1971இலிருந்து பயணச் சிற்றூர்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான நகர்வாணிபங்களிலும் பொருட்களைக் கொண்டு செல்லச் சிற்றூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

படிச் சிற்றூர்தி

அமெரிக்க அஞ்சற்சேவைப் படிச் சிற்றூர்தி

படிச் சிற்றூர்தியானது பெரும்பாலும் வழங்கற்சேவைகள், தூதஞ்சற்சேவை போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் அஞ்சலகங்களினால் பொதிப் பிரிப்புச் சேவைக்கும் படிச் சிற்றூர்தி பயன்படுத்தப்படுகின்றது.

பெரிய நகரங்களில், படிச் சிற்றூர்திகள் அவற்றின் வாயிலைத் திறந்தபடியே செல்வதை அவதானிக்க முடியும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.