சிறுமுது அறிஞர்

சிறுமுது அறிஞர் (child prodigy) என்போர் சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர் ஆவர். [1]அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை சிறுமுது அறிஞர் என்று சொல்லலாம் என ஒரு வரையறை கூறுகிறது.[1][2]

சிறிய வயதிலேயே வியத்தகு திறமையை வெளிக்காட்டிய மொசார்ட் (படத்தில் இருப்பது மொசார்ட் குடும்பம்)

பரவலர் ஊடகங்களில் இத்தகைய திறன் உடையோரை அதிசயக் குழந்தை அல்லது சாகசக் குழந்தை என்று கூறுவர்.

இசைத்துறையில் மொசார்ட், சதுரங்கத்தில் பால் மர்ஃபி, கணிதத்தில் காஸ் மற்றும் நியூமான், கலைத்துறையில் பாபுலோ பிக்காசோ ஆகியோர் சிறுமுது அறிஞர்கள் ஆவர். [3]அதுமட்டுமன்றி இவர்கள் பெரியவர்கள் ஆன பின்னும் தங்கள் திறமையைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் பெரும்பாலான சிறுமுது அறிஞர்கள் காலம் செல்லச் செல்ல தங்கள் திறமையை இழந்து விடுவதும் உண்டு.

திருஞானசம்பந்தர் போன்ற தமிழ்ப் புலவர் பலரும் சிறுமுது அறிஞராய்த் திகழ்ந்தனர்.

மேற்கோள்கள்

  1. Rose, Lacey. "Whiz Kids". Forbes. Archived from the original on 2012-12-16. http://archive.is/gsWe. பார்த்த நாள்: 2009-06-07.
  2. Feldman, David H: "Child Prodigies: A Distinctive Form of Giftedness", National Association for Gifted Children, Gifted Children Quarterly., 1993, 37(4): 188-193.
  3. Charles McGrath (2006-01-28). "Philosopher, 65, Lectures Not About 'What Am I?' but 'What Is I?'". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2006/01/28/books/28krip.html?pagewanted=1&ei=5088&en=9b8c06355a8dc486&ex=1296104400&adxnnl=0&partner=rssnyt&emc=rss&adxnnlx=1156068875-xI9kVaL9WqHJhRK5STWHrw. பார்த்த நாள்: 2008-01-23.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.