சிராந்தி ராசபக்ச

சிராந்தி ரசபக்ச (Shiranthi Rajapaksa, கன்னிப்பெயர்: விக்கிரமசிங்க) இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவின் மனைவி ஆவார். இவர் சிறுவர் மனோவியல் தொடர்பான தொழிற்புலமை உடையவர்.

சிராந்தி ராசபக்ச
தனிநபர் தகவல்
பிறப்பு சிராந்தி விக்கிரமசிங்க
பதுளை
தேசியம் இலங்கையர்
வாழ்க்கை துணைவர்(கள்) மகிந்த ராசபக்ச (m. 1983)
பிள்ளைகள் நாமல் ராசபக்ச, யோசித மற்றும் ரோசித
படித்த கல்வி நிறுவனங்கள் திருக்குடும்பக் கன்னியர் மடம், கொழும்பு

சிராந்தி இலங்கையின் 1973 ஆம் ஆண்டுக்கான அழகுராணிப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார். அதன் பின்னர் ஏத்தன்சில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும், 1973 ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.