சிபிலிசு

கிரந்தி அல்லது சிபிலிசு (Syphilis) என்பது பரவலாகக் காணப்படும் ஒரு பாலியல் நோயாகும். சிபிலிஸ் நோய் என்பது நீள் சுருள் பாக்டீரியா டிரீபோனிமா பல்லிடம் ஏற்படுத்தும் பால்வினை நோய் ஆகும். இந்த நோயானது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது, நோயுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் கடத்தப்படுகிறது.[1] சில நேரங்களில் கருவில் உள்ள சிசு பிறக்கும் போது குழந்தைக்கு தாயிடம் இருந்து தொற்றடைந்த குருதியினாலும் தொற்றலாம், அதற்கு பிறவி சிபிலிஸ் என்று பெயர்.

அறிகுறிகள்

சிபிலிஸ் அறிகுறிகளை நான்கு வெவ்வேறு நிலைகளில் வழங்கலாம்: முதன்மை, உயர்நிலை, உள்ளுறை, மற்றும் மூன்றாம் நிலை ஆகும்.

  • பாலுறுப்புப் பிரதேசத்தில் நோவற்ற புண்கள்
  • உடலெங்கும் குறிப்பாக உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சொறி ஏற்படல்
  • நிணநீர் சுரப்பிகள் வீங்கிப் பருத்தல்
  • தசைவலி

முதன்மை நிலை

முதன்மை சிபிலிஸ் பொதுவாக மற்றொரு நபரின் தொற்று புண்களிடமிருந்து நேரடி பாலியல் தொடர்பு மூலம் பரவும்.ஆரம்ப வெளிப்பாடாக (சராசரியாக 21 நாட்கள்) பாலுறுப்பில் மேகப்பிளவை (Chancre) என்னும் வலியற்ற, அரிக்கும் தன்மை அல்லாத தோல் புண்கள் உண்டாகும்.

இரண்டாம் நிலை

இரண்டாம் நிலை சிபிலிஸ் சுமார் நான்கு முதல் பத்து வாரங்கள் முதன்மை தொற்றுக்கு பின்னர் ஏற்படுகிறது. இரண்டாம் நோய் வெளிப்படையான பல வழிகளில் அறியப்படுகிறது, அறிகுறிகள் பொதுவாக தோல், சீத சவ்வுகளில் மற்றும் நிணநீர் உள்ளடக்கியது. உடல் முழுவதும் சமச்சீர், சிவப்பு இளஞ்சிவப்பு நிற அரிக்கும் தன்மையால்லா தடிப்புகள் இருக்கலாம்.

மறைந்திருக்கிற நிலை

உள்ளுறை சிபிலிஸ் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். இந்நிலையில் இரத்தத்தில் நோய் எதிர் பொருள் (antibody) இல்லாமல் இருக்கும். ஆரம்பகட்ட மறைந்திருக்கும் சிபிலிஸ் மூன்றாம் நிலையாக மாறலாம் அல்லது இறுதிகட்ட மறைந்திருக்கும் சிபிலிஸ் ஆக மாறலாம்.

மூன்றாம் நிலை

மூன்றாம் நிலை சிபிலிஸ் சுமார் 3 முதல் 15 ஆண்டுகள் ஆரம்ப தொற்றுக்கு பின்னர் ஏற்படலாம், இதை மூன்று வெவ்வேறு வடிவங்களில் பிரிக்கலாம்: கம்மடௌஸ் சிபிலிஸ் (15%), நியுரோசிபிலிஸ் (மூளைசிபிலிஸ்)(6.5%), மற்றும் இருதய சிபிலிஸ் (10%). சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம் சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம்.

கண்டறிதலும் சிகிச்சையும்

  • VDRL என்னும் குருதிச் சோதனை மூலம் நோயைச் சரியாக இனங்காணலாம்.
  • TPPA என்னும் குறிப்பான சோதனையால் உறுதிப்படுத்தலாம்
  • ஊசிமூலம் பென்சிலின் செலுத்தி சிகிச்சையளிக்கப்படும்

மேற்கோள்கள்

  1. டாக்டர் கு. கணேசன் (2018 சூன் 23). "கலக்கமூட்டும் கிரந்தி!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 சூன் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.