சின்மயா மிசன்
சின்மயா மிசன் என்ற அமைப்பானது சுவாமி சின்மயானந்தாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக 1953 இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாகத் தலைமை அலுவலகம் இந்தியாவின் மும்பாய் (முன்னைய பம்பாய்) இல் அமைந்துள்ளது. இவ்வமைப்பிற்கு உலகேங்கிலும் 300 இற்கு மேற்பட கிளைகள் உண்டு.
குறிக்கோள் உரை | To give maximum happiness to the maximum number for the maximum time |
---|---|
உருவாக்கம் | 1951 |
நிறுவனர் | சின்மயானந்தா |
வகை | Spiritual organization[1] |
சட்ட நிலை | Trust |
நோக்கம் | Spirituality, வேதாந்தம் |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
அமைவிடம் |
|
சேவைப் பகுதி | Worldwide |
Headed By | Swami Swaroopananda |
மைய்ய அமைப்பு | Central Chinmaya Mission Trust |
வலைத்தளம் | www.chinmayamission.com |
செயற்பாடுகள்
இந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள் சின்மயாமிசன் கீழ்வரும் சேவைகளில் வழங்குகின்றனர்.
- பாலவிஹார் - அகவை(வயது) 5 இல் இருந்து 14 வரையுள்ள சிறுவர்கள்
- சின்மயா யுவ கேந்திரா - 15 முதல் 28 வயதுடைய இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கானது
- வளந்தவர்களுக்கான கல்விக்குழுக்கள்
மத மற்றும் ஆத்மீகரீதியாக
இந்தியாவின் சின்மயா மிஷன் 24 கோவில்களையும் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் 7 இற்கு மேற்பட்ட கோவில்களையும் கொண்டுள்ளது.
சமூகசேவையில்
- மருத்துவத்துறையில் சின்மயாமிசன் பல நலன் பேணும் நிலையங்களைக் இந்தியாவில் கொண்டுள்ளது.
- வைத்தியசாலை - 1
- தாதியர் பயிற்சிநிலையம் - 1
- சிகிச்சை நிலையங்கள் - 14
- கிராமப்புறக் கண்பராமரிப்பு நிலையங்கள் - 1
- சமூக மற்றும் மருத்துவரீதியில் உதவிகளை வழங்குவதற்காகத் தத்தெடுத்த கிராமங்கள் - 120
- வயதில் மூத்தோர்களுக்கான வீடுகள் - 8
- தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் - 1
- கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்கள் -1
- சிறுவர் பராமரிப்பு நிலையம் - 1
- சின்மயாமிஷனின் கல்விப் பங்களிப்பாக
- (தினப்) பாடசாலைகள் - 70
- சின்மயா சர்வதேசத் தங்கியிருந்து கற்கும் பாடசாலை -1
- ஹரிஹார் பாடசாலை (சுயதேவைகளை பூர்த்திசெய்வதற்காக தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கான இலவச பாடம் மற்றும் தொழிற்பயிற்சிகள்)
- கல்லூரிகள் (Colleges) – 4
- பட்ட படிப்புக் கல்லூரிகள் (Degree College) – 1
- மேற்கல்விக்கான சின்மயாவின் அமைப்பு எனப் பொருள்படும் சின்மயா இன்ஸ்ரிரியூட் ஆப் ஹயர் லேனிங் (Chinmaya Institute of Higher Learning) -1
- சின்மயா பாரம்பரிய நிலையம்
- பாடசாலைகளில் கற்பதன் பெறுமதிகளைப் போதித்தல் (இது தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களில் நடத்தப்படுகின்றது).
- இன்ஸ்ரிரீயுட் ஆப் மனேஜ்மண்ட்
பண்பாடுகள் தொடர்பாக
- புகழ் பெற்ற் இந்திய வேதாகமக் கொள்கைளைப் பரப்புவதோடு பிராந்திய மொழிகளையும் பரப்புகின்றனர்.
- இளைஞர்களைப் பொதுவிடங்களில் பேசுவைப்பதற்கான கருத்தரங்குகள்.
- இளைஞர்கள் மற்றும் வளந்தோருக்கான ஆளுமைகள் மற்றும் முன்னொடுப்புக்களை வளர்ப்பதற்காகன் பயிற்சிப் பட்டறைகள்.
- கலாமந்திர் - 2
- உலக புரிந்துணர்விற்கான நிலையம் - 2
- இந்திய வேதாகம ஆய்வு நிலையம்.
சின்மாயாமிஷனின் ஆதிக்கம்
சின்மயா மிஷன் தென்னிந்தியா மற்றும் இந்திய கலாச்சரத்தினைப் பின்பற்றும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் பலநாடுகளில் இதன் ஆதிக்கம் காணப்படுகின்றது.
பிரபலான பிரசுரங்கள்
- சஞ்சிகைகள்
- பாலவிஹார் -மாதாந்த சஞ்சிகை
- தபோவன் பிரசாத் - மாதாந்த சஞ்சிகை
- சின்மயா உட்கோஷ் - மாதாந்த சஞ்சிகை
சிறு பிரசுரங்கள்
- சஞ்சிகைகள்
- பாலாஷைன் - மாதாந்த சஞ்சிகை - டெலாஸ், அமெரிக்கா
வெளியிணைப்புக்கள்
- சின்மயா மிஷன் (ஆங்கில மொழியில்)
- மேற்கத்தைய சின்மயா மிஷன் (ஆங்கில மொழியில்)
- சின்மயா மிஷன் ஆஸ்திரேலியா (ஆங்கில மொழியில்)
- சின்மயா மிஷன் நியூசிலாந்து (ஆங்கில மொழியில்)
- சின்மயா மிஷன் ஐக்கிய இராச்சியம் (UK) (ஆங்கில மொழியில்)
- சின்மயா யுவ கேந்திரா (CHYK) (ஆங்கில மொழியில்)
- சின்மயா சர்வதேசத் தங்கியிருந்து கற்கும் பாடசாலை (ஆங்கில மொழியில்)
- "Chinmaya Mission". Chinmaya Official Website.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.