சித்தங்கேணி

சித்தன்கேணி என அழைக்கப்படும் ஊர் யாழ் நகரிற்கு வடமேற்காக 15KM தூரத்தில் வலிகாமம் மேற்கு வலயத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒரு கிராமமாகும்.

இலங்கையில் யாழ் நகரில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இடங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.

இவ்விடத்தின் சித்தன்கேணி என்ற பெயருக்கு காரணம் என கூறப்படும் வாய்வழிக்கதை: ஒரு காலத்தில் இவ்விடத்தில் பிரபலமான சித்தர்கள் ஒன்று கூடி வழிபாடுகளை நடத்தினரெனவும் அவர்கள் இறைவனை வழிபடும் நோக்குடன் கேணி ஒன்றை அமைத்தாகவும் அதன் காரணத்தாலேயே இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தாகவும் கூறப்படுவதுண்டு. சித்தர்கள் அமைத்து வழிபட்டதாக கூறப்படும் அந்த பழமை வாய்ந்த கேணி தற்போதும் காணப்படுகின்றது. அக் கேணிக்கருகில் ஒரு வைரவராலயமும் அமைத்து அப் பிரதேச மக்கள் வழிபாடுகளை நடத்தி வருவதுடன் பூசாரி என அழைக்கப்படும் அந்தணர்களால் முக்கால பூசை வழிபாடுகளும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

மேலும் இவ்விடத்தில் பிரபலமான ஆலயங்களும் காணப்படுகின்றன. சித்தன்கேணி ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம் மற்றும் சித்தன்கேணி ஸ்ரீ கணபதி ஆலயம் என்பன இங்கு அமைந்துள்ள பிரபல ஆலயங்களுள் குறிப்பிடத்தக்கவை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.