சிட்டி பாபு (வீணைக் கலைஞர்)

வீணை சிட்டிபாபு என அறியப்பட்ட சிட்டி பாபு (அக்டோபர் 13, 1936 – பிப்ரவரி 9, 1996) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த சிட்டிபாபுவின் இயற்பெயர் ஹனுமானுலு என்பதாகும். ஈமனி சங்கர சாஸ்திரி என்பவரிடம் வீணைப் பயிற்சி பெற்றார்.

தனது தந்தை செல்லப்பள்ளி ரங்காராவ் ஒருமுறை வீணை வாசித்துக் கொண்டிருந்தபோது, தவறொன்றை 5 வயது சிறுவன் சிட்டி பாபு சுட்டிக்காட்டினார்.

இசை வாழ்க்கை

திரைப்படத் துறைப் பங்களிப்புகள்

திரைப்பட இசைக்குழுக்களில் வீணை வாசித்துள்ளார். சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் இராவணன் வாசிப்பதாக அமைக்கப்பட்ட 'சங்கீத சௌபாக்கியமே' எனும் பாடலில் வீணை வாசித்தவர் இவரே. தேசிய விருது பெற்ற திக்கற்ற பார்வதி எனும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சிட்டிபாபு ஆவார்.

மேடைக் கச்சேரிகள்

இவரது கச்சேரிகளில் இடம்பெறும் கதனகுதூகலம், குக்குக் பாட்டு போன்றவை நேயர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

பெற்ற விருதுகள்

குடும்பம்

இவரின் மனைவி, சுதந்திரப் போராட்ட வீரர் பட்டாபி சீத்தாராமய்யாவின் பேத்தியாவார். சிட்டிபாபுவின் மகன் சுந்தர் சி. பாபு பிரபல திரைப்பட இசையமைப்பாளர்.

மறைவு

பிப்ரவரி 9, 1996 அன்று மாரடைப்பின் காரணமாக தனது 59 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.

உசாத்துணை

  • 'இசை உலக மாமேதைகள்' எனும் தொகுப்பு, பக்கம் எண்: 108. வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2013 - 2014)

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.