சிசு நாகேந்திரன்

சிசு நாகேந்திரன் இலங்கையில் திரைப்படங்கள் மூலமும், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமும் அறியப்பட்ட கலைஞர். அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் சக்கடத்தார் இராஜரத்தினத்துடன் இணைந்து எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை வழ்ங்கியவர். நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். லண்டனில் இருந்து தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையில் மலையகத்தில் பணிபுரிந்த மருத்துவர் சுந்தரம் பிள்ளைக்கும், சின்னம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சிசு நாகேந்திரன். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) லண்டன் மற்றிக்குலேஷன் வகுப்பு வரை படித்தார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளிலும் கற்றுத் தேறினார்.

1944 இல் இலங்கை அரச சேவையிலே சேர்ந்து, சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி, 1979 இல் இளைப்பாறினார்.

இவர் எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூல் யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் ஆவணங்களுள் முக்கியமானதாகும்.

நடித்த திரைப்படங்கள்

எழுதிய நூல்கள்

  • அந்தக்காலத்து யாழ்ப்பாணம், 2004, வெளியீடு: கலப்பை, சிட்னி
  • பழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி, தமிழ் - ஆங்கிலம் (2015)

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "மாருதி விருது 2013". தமிழ் அவுஸ்திரேலியன் (23 அக்டோபர் 2013). பார்த்த நாள் 5 சூலை 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.