சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி

சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி (Workers' Party of Singapore, அதிகாரபூர்வமாக பாட்டாளிக் கட்சி, The Workers' Party, (சுருக்கம்: WP; மலாய்: Parti Pekerja), என்பது சிங்கப்பூரின் முக்கிய நடு-இடதுசாரி அரசியல் கட்சியாகும். இக்கட்சி தற்போது சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும், மூன்று தொகுதி-வாரியற்ற நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் இருந்து பாட்டாளிக் கட்சியே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரே ஒரு எதிர்க் கட்சியாகும்.

சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி
Workers' Party of Singapore
Parti Pekerja
新加坡工人党
தலைவர்சில்வியா லிம்
செயலாளர் நாயகம்லாவ் தியா கியாங்
தொடக்கம்3 நவம்பர் 1957 (3 நவம்பர் 1957)
தலைமையகம்216-G செய்யது அல்வி வீதி
#02-03
சிங்கப்பூர் 207799
இளைஞர் அமைப்புபாட்டாளிக் கட்சி இளையோர் அணி
உறுப்பினர்Unknown
கொள்கைசமூக சனநாயகம்
அரசியல் நிலைப்பாடுநடு முதல் நடு-இடது
நிறங்கள்Light blue
நாடாளுமன்றம்
9 / 101
இணையதளம்
http://www.wp.sg/

பாட்டாளிக் கட்சி 1957 நவம்பர் 3 இல் சிங்கப்பூரின் முன்னாள் முதல்வர் டேவிட் மார்சல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட்டது.[1] 1981 இல் இக்கட்சியின் அப்போதைய தலைவர் ஜே. பி. ஜெயரத்தினம் நாடாளுமன்றத்தின் முதலாவது எதிர்க்கட்சி உறூப்பினராக 1965 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவர் ஆன்சன் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார். 1984 பொதுத்தேர்தலில் மீண்டும் தெரிவு செய்ப்பட்டார். 1986 இல் இவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் உறுப்பினர் பதவியை இழந்தார். ஜெயரத்தினம் பின்னர் 1997 முதல் 2001 வரை நாடாளுமன்றத்தின் தொகுதிவாரியற்ற நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. "Our story: 167,000 wants independence". AsiaOne. Singapore Press Holdings (1998). பார்த்த நாள் 9 மே 2011.
  2. "The politics of judicial institutions in Singapore". Francis Seow (1997).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.