சிக்ஃபிரைட் கோடு

சிக்ஃபிரைட் கோடு (ஜெர்மன்: Siegfriedstellung, ஆங்கிலம்: Siegfried Line) என்பது ஜெர்மனியின் மேற்கு எல்லையில் இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட ஒரு அரண் கொட்டைக் குறிக்கும். ஜெர்மானியர்கள் இதனை “மேற்கு சுவர்” என்றே அழைத்தனர். அவர்கள் முதலாம் உலகப் போரின் போது பிரான்சின் வடக்கு பகுதியில் கட்டப்பட்ட ஹிண்டன்பர்க் அரண் கோட்டின் ஒரு பகுதியைத் தான் ”சிக்ஃபிரைட் கோடு” என்று வழங்குகிறார்கள். ஆனால் ஆங்கிலம் பேசும் வரலாற்றாளர்கள் இரண்டாம் உலகப்போர் அரண் கோட்டைக் குறிக்கவே இப்பெயரை பயன்படுத்துகின்றனர்.

சிக்ஃபிரைட் கோட்டின் வரைபடம்

630 கி. மீ நீளமுள்ள இநத அரண் கோடு ஹிட்லரால் 1936ல் திட்டமிடப்பட்டு 1938 முதல் 1940 வரை கட்டப்பட்டது. அவர் இதனை போரியல் நோக்கத்துக்காக கட்டவில்லை. ஒரு வித கொள்கை பிரச்சார உத்தியாகவே இதன் கட்டுமானத்தை பயன்படுத்தினார். இதற்கு மிக அருகில் ஏறத்தாழ இணைகோட்டு நிலையில் பிரான்சின் அரண் கோடான மஷினோ கோடு அமைந்திருந்தது. மேற்கே நெதர்லாந்த்தின் கிளீவில் தொடங்கி இக்கோடு தென்கிழக்கே சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள வெயில் ஆம் ரெயின் நகர் வரை தொடர்கிறது. இதில் 18,000 பதுங்கு குழிகள், டாங்கு பொறிகள் மற்றும் சுரங்கப் பாதைகள் உள்ளன. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் இக்கோட்டின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டன. மீதமுள்ள பகுதிகள் தற்போது நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.