சிகாகோ பெருந்தீ

சிகாகோ பெரும் தீ (Great Chicago Fire) அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு பெரும் தீ விபத்து. அக்டோபர் 8, 1871ல் எரிய ஆரம்பித்து, அக்டோபர் 10 வரை தொடர்ந்து எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்களை எரித்து சிகாகோவின் நான்கு சதுர மைல்களில் உள்ள அனைத்தையும் எரித்து நாசப்படுத்தியது இத்தீ.[1] பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீயான இதனால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டாலும் நகரத்தின் புனரமைப்பு வெகு வேகமாக செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிகாகோ உள்ளது.

சிகாகோ பெரும் தீ

சிகாகோவின் கொடியில் உள்ள இரண்டாம் நட்சத்திரம் இப் பெரும் தீயினைக் குறிக்கிறது.[2] இந்நாள் நாள் வரை இத்தீ உருவான காரணம் அறியப்படவில்லை.

நிகழ்வுகள்

இத்தீ அக்டோபர் 8ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில், 137 டேகோவென் தெருவிலுள்ள ஒரு சின்ன கிடங்கில் ஆரம்பித்தது.[3] செய்தித்தாள் நிருபரான மைகேல் அஹர்ன் என்பவர் இத்தீ ஒரு மாடு எரிவிளக்கை எட்டி உதைத்ததனால் உருவானது என்று கூறினார். ஆனால் 1893ஆம் ஆண்டில் தான் சொன்னவை உண்மையில்லை என்று அறிவித்தார்.[4]

இந்த தீ சிகாகோ நகரத்தின் அதிகமான மரக்கட்டை பயன்பாடு மற்றும் தென்மேற்கு காற்றினாலும் அதிகமாக ஏரிந்தது. சீக்கிரமாக தடுக்காதலாலும் முன்னதாக நடந்த தீவிபத்தில் சோர்வடைந்த தீயணைப்பவர்களாலும் தீயின் பரப்பளவு அதிகமானது.[5] நகரத்தின் தீயணைப்புத்துறையினர் காலை சுமார் பத்து மணியளவில் அழைக்கப்பட்டனர். அவர்களின் தவறால் தீ மேலும் பரவியது. இரண்டு நாட்கள் முழுவதும் தீயணைப்பவர்கள் தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பெய்த மழையினால் தீ முற்றிலுமாக அனைக்கப்பட்டுவிட்டது. 300 மக்கள் இறந்ததாகவும், 3 இலட்சம் மக்கள் வீடிழந்ததாகவும் கூறப்பட்டது.

தப்பிய கட்டிடங்கள்

இத்தீயிலிருந்து தப்பி இன்றுவரை நிற்கும் கட்டிடங்கள்:

  • தூய மைகேல் சர்ச்
  • சிகாகோவின் தண்ணீர்த்தொட்டி
  • சிகாகோ அவென்யூ நீரேற்று நிலையம்

படங்கள்

குறிப்புகள்

  1. Bales, Richard (2004). "What do we know about the Great Chicago Fire?". பார்த்த நாள் 2008-11-14.
  2. "Municipal Flag of Chicago". Chicago Public Library (2009). பார்த்த நாள் 2009-03-04.
  3. Bessie Louise Pierce (1957, rep. 2007). A History of Chicago: Volume III: The Rise of a Modern City, 1871–1893. Chicago: University of Chicago Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-66842-0.
  4. "The O'Leary Legend". Chicago History Museum. பார்த்த நாள் 2007-03-18.
  5. "The fire Fiend"". Chicago Daily Tribune: pp. 3. 1871-10-08.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.