சாஹிவால் மாடு

சாஹிவால் மாடு (Sahiwal) என்பது முதன்மையாக பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நாட்டு மாட்டு இனமாகும். இம்மாட்டினம் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாஜிவாலை பூர்வீகமாக‍க் கொண்டவை. [1] இவற்றின் பால் சிவப்பு சிந்தி மற்றும் புட்டனா இனங்களின் பாலைப் போலவே இருக்கும். சாஹிலால் மாடுகள் பஞ்சாப்பில் அருகிவரும் உள்நாட்டு மாட்டு இனமாக கருதப்பட்டு, இந்த மாடுகளை வளர்க்க 'ராஷ்டிரிய கோகுல் மிஷனின்' கீழ் சலுகைகள் வழங்கப் படுகிறது. [2]

கர்நாடகத்தின் ஒசநகரில் உள்ள அம்ருதாதரா கோசாலையில் உள்ள ஒரு சாஹிலால் காளை
இந்தியாவில் ஒரு சாஹிலால் பசு

விளக்கம்

இந்த மாட்டுகள் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இவற்றின் தோல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் காணப்படும் சில சமயங்களில் தோலில் வெள்ளைத் திட்டுகளும் இருக்கும்.[3]

மேற்கோள்கள்

  1. Oklahoma State University breed profile
  2. "For desi breed ‘Sahiwal’, Punjab luring farmers with special benefits | punjab$bhatinda". Hindustan Times (2016-05-06). பார்த்த நாள் 2016-10-19.
  3. "சாஹிவால்". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். பார்த்த நாள் 8 சனவரி 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.