சாலினி

சாலி என்னும் சொல் நெல்லைக் குறிக்கும். இது நெல்லின் வகைகளில் ஒன்று. [1]

மறவரினத்தில் மகளாக பிறந்தவள்.

கொற்றவை தெய்வத்தைச் சாலினி என்றனர். கருவுற்றிருந்த பெண்கள் யாழ், முழவு, ஆகுளி முழக்கத்துடன் சாலினிக்குப் பொங்கலிட்டுப் படைத்தனர்.[2]

விண்ணின் வடதிசையில் விங்கும் விண்மீன்கள் ஏழு. அவற்றுள் சாலினி என்னும் மீன் ஒன்று. இதனை வடநூலார் அருந்ததி என்பர். இந்திரன் முருகனைத் துண்டு துண்டாக்கிய தசைப் பிண்டத்தை இந்த அருந்ததி என்னும் சாலினி நீங்கலாக ஏனைய அறுவரும் உண்டு ஆறு மகவைப் பெற்றார்களாம். ஆவை ஒன்றானவன் ஆறுமுகனாம். [3]

சாலினி விண்மீனைச் சிலப்பதிகாரம் சாலி என்று குறிப்பிடுகிறது. இது வடதுருவமாக விளங்கும் விண்மீன். மற்ற விண்மீன்களைப் போல மக்கள் கண்ணுக்குத் திசை மாறித் தோன்றாமல் ஒரே இடத்தில் தோன்றுவதால். மனம் மாறாத கற்புடைய பெண்ணாக உருவகம் செய்வர். [4]

சாலினி என்பவள் வேட்டுவர் குடியில் சாமியாடிக் குறி சொல்லும் பெண். [5]

அடிக்குறிப்பு

  1. சாலி நெல்லின், சிறை கொள் வேலி, பொருநராற்றுப்படை. 246
  2. கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
    பெருந் தோள் சாலினி மடுப்ப (மதுரைக்காஞ்சி 609-610)
  3. வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
    கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
    அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: (பரிபாடல் 5 அடி 43-45)
  4. வானத்துச் சாலி ஒரு மீன் தகையாள் (சிலப்பதிகாரம் காதை1 அடி 50)
  5. வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்
    பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
    தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,
    கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப, (சிலப்பதிகாரம் 12-1-7)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.