உலகாயதம்

சாவகம் என அழைக்கப்படும் உலகாயதம் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. உலகை நோக்கி பொருள்முதல்வாத அனுபவாத அணுகுமுறையை இது முன்னிறுத்துகிறது. கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாயதம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், "உலக உடன்பாட்டு சிந்தனையும்" கொண்டது.[1] இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது.

இந்திய மெய்யியலில் பொருளியவாத, இயற்கை விளக்க நோக்கு உடைய மெய்யியல் சார்வாகம் அல்லது லோகாயதம் அல்லது நாத்திகம் ஆகும். இது இந்திய மைய மெய்யியலான வேத மெய்யியலுக்கும், சடங்குகளுக்கும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்த பொருளிய வாதமாகும்.

சார்வாகம் என்பது இந்தியத் தத்துவ இயலில், தத்துவ ரீதியான ஐயப்பாடுகள் மற்றும் வேத மறுப்பு ஆகியவற்றைக் கைக்கொண்ட ஒரு பிரிவாகும்.

இந்தியத் தத்துவ இயலில், சார்வகம், நாத்திக வாதமாகவே வகைப்படுத்தப்படுகிறது. இதே போன்றதொரு வகைப்படுத்துதலே புத்த மற்றும் சமண மதங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இது பருப்பொருள் சார்ந்த மற்றும் இறை மறுப்பு வாதப் பண்புகள் குறித்தே அறியப்படுவதாக உள்ளது. இந்து மதத் தத்துவ இயலின் மரபு வழி வந்துள்ள ஆறு கருத்தாக்கங்களில் ஒன்றாக இது கருதப்படவில்லை எனினும், இந்து மதத்தின் உள்ளீடாக பருப்பொருள் சார்ந்த கருத்தியக்கம் என்ற அளவில் இது குறிப்பிடத்தக்கதாகும்.[14][15]

பெயரும் தோற்றுவாய்களும்

இப்பெயர் முதன் முதலாக கௌடில்யரின் அர்த்த சாத்திரம் என்னும் நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அவர், யோகம், சாங்கியம் மற்றும் உலகாயதம் என்னும் மூன்று தர்க்கவியல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். உலகாயதம் என்பது இங்கு தர்க்க ரீதியான கருத்துப் பரிமாற்றங்களைக் குறிப்பிடுகிறதே அன்றி, பருப்பொருள்சார் வாதத்தினை அல்ல. இதைப் போன்றே, ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சத்தாநிதி மற்றும் புத்தகோஸ் ஆகியவையும், விதாந்திகளுடன் உலகாயதக் கருத்தாக்கத்தை இணைப்பவையாக உள்ளன. ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான், இச்சொல்லானது [18] என்பதைக் குறிப்பதாக அமையலானது. [19] என்னும் இச்சொல், முதலில் புரந்தரர் என்னும் தத்துவ இயலாளரால் ஏழாம் நூற்றாண்டில் கையாளப்பட்டது. அவர் தம்மை ஒத்த பருப்பொருள்வாதிகளை[20] "சார்வாகர்கள்" எனக் குறிப்பிடுகிறார். ஆயினும், சங்கரர் [22] என்றல்லாது [21] என்பதாகவே இதனைக் குறிப்பிடுகிறார்.[23] சொல் இலக்கணத்தின் வழி, [24] எனும் இச்சொல்லுக்குப் பொருள், 'பேச்சில் திறனுற்றவன் வாதத்தில் ஆர்வமுற்றவன்' என்பதாகும்.

எதிக்ஸ் ஆஃப் இந்தியா (The Ethics of India) என்னும் தமது நூலில் ஈ.டபிள்யூ.ஹாப்கின்ஸ் (E. W. Hopkins), சார்வாகத் தத்துவம் புத்த தத்துவத்துடன் சமகால விளைவு என்பதாகக் குறிப்பிடுகிறார். கி.மு. 500ஆம் ஆண்டு வாக்கில், இது, "நம்பிக்கையின்மை" எனப் பொருள்தருவதாகக் கொள்ளப்பட்டு ஒரு முறையான தத்துவ இயலுக்கான அங்கீகாரம் விடுக்கப்பட்டது. இதை மேலும் தாழ்மையுறச் செய்ய, மஹாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் எனப் பெயரிடப்பட்டது. நம்பிக்கையின்மை என்பதன் நேர்மறையான முதல் வாதம் ராமாயணக் காவியத்தில் காணக் கிடைக்கிறது.

காண்பதையே கருத்தென்று கொள். உணர்வால் அறிய இயலாதவற்றை உன் பின்னால் விட்டு விட்டுச் செல். (2.108)

இவ்வாறாக, சார்வகம் என்பதானது இறுதியாக மௌரியர்கள் காலத்து நம்பிக்கையின்மை என்னும் தத்துவ வாதப் பிரிவாக மாறுபடலானது. ஆயினும், ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே எப்போதிருந்து இது முறைப்படுத்திய ஒரு தத்துவப் பிரிவாக இருந்து வந்துள்ளது என்பதை அறிய இயலவில்லை. பிரஹஸ்பத்ய சூத்திரங்கள் மௌரியர் காலத்தவையாகவே இருக்கக் கூடும். பதஞ்சலியின் மஹாபஸ்யத்தில் இவை பற்றிய ஒரு குறிப்பினைக் கொண்டு, இவற்றை கி.மி.150ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த கால கட்டத்தவையாகக் கொள்ளலாம்.[25]

நம்பிக்கைகள்

தத்துவ இயலின் சார்வாகப் பிரிவானது, இறை மறுப்பு, பருப்பொருள் சார்பு மற்றும் இயற்கை இயைமை ஆகிய நம்பிக்கைகளைக் கொண்டது.

மரித்தபின் மறு வாழ்வில்லை மரணம் அடைந்த பின்னர் மறு வாழ்வு உண்டென்று சார்வகம் நம்புவதில்லை. இத்தனிமங்களிலிருந்து கிளர்ந்தெழுந்ததான பருப்பொருள் அறிவு அழிகிறது. அது அழிந்த பின்னர்- அறிவென்று ஏதும் நிலைப்பதில்லை. [30]

இயற்கை இயைமை

இயற்கை இயைமை என்பதையே சார்வகம் நம்பியது. அதாவது அனைத்துப் பொருட்களும் (ஏதும் கடவுள் அல்லது பரம்பொருள் ஆகியவற்றிலிருந்து அல்லாது) இயற்கையிலிருந்தே உருவாகின்றன.

நெருப்பு கொதிப்பாகவும், நீர் குளிராகவும் காலைக் காற்று புத்துணர்வாகவும் உள்ளது. யாரிடமிருந்து இந்த வகைகள் வெளியாயின? இவை அவற்றின் இயல்புகளே அன்றி வேறேதுமில்லை.[31]

உணர்வமிழ்மை

மதம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பே எனவும், இறைமை என்று ஏதும் இல்லை எனவும் சார்வகம் கருதியது. மூன்று வேதங்களின் ஆசிரியர்களும் கோமாளிகள், திருடர்கள், பைசாசங்கள் பண்டிதர்களின், ஜர்பாரிகளின், ருபாரிகளின் சூத்திரங்களாக அறிபவை அனைத்தும் அசுவமேத யாகத்தில் அரசியின் கடமைகளாக ஆபாசங்கள் அனைத்தும் இக்கோமாளிகளின் கண்டுபிடிப்பே. இதைப் போன்றவையே பூசாரிகளுக்கு வழங்கும் பரிசுகளும் மற்றும் இரவில் நடமாடும் இரத்தக் காட்டேரிகளுக்கு நரபலி அளிப்பதும்.

மாதவாச்சாரியரும் சார்வாகரும்

மாதவாச்சாரியர் தென்னிந்தியாவில் 13ஆம் மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த வேதக் கருத்தாக்கங்களின் மரபு வழி வந்த தத்துவ இயலாளர். இவர், தனது சர்வ-தரிசன-சங்கிரஹம் என்னும் நூலில் ஒரு அத்தியாத்தில் சார்வாகத்தை மறுதளிக்கும் விதமாக அதைப் பற்றி உரைக்கிறார். இந்து மதத்தை உருவாக்கியவர்களாகக் கருதப்படும் சிவன் மற்றும் திருமால் ஆகிய கடவுளரைத் தொழுத பிறகு, முதல் அத்தியாயத்தில் மாதவாச்சாரியார் இவ்வாறு வினவுகிறார்: நாத்திக வாதத்தின் முதன்மை கருத்தோற்றமாக விளங்குவதும், பிரகஸ்பதியின் அடியொற்றியதுமான சார்வாகர் முற்றிலுமாக மறுத்து விட்ட கருத்தாக்கமான, 'உலகெலாம் உணர்ந்தவன்' என்னும் பெருமையை எவ்வாறு இறைமைக்கு அளிக்கவியலும்? சார்வாகரின் முயற்சிகளை அழிப்பது கடினம். காரணம், தற்போது வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இவ்வாறே வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்க்கை உனதாக இருக்கையில், வாழ்ந்து பார்த்து விடு சாவின் வேட்டைக் கண்களிலிருந்து யாரும் தப்ப இயலாது. நமது இந்த வடிவினை அது எரித்து விட்ட பின்னர் மீண்டும் எங்ஙனம் அது திரும்ப இயலும்?

மாதவரின் சார்வாகத்தின் சாரம்

வானுலகு, மோட்சம், நகரம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணக்ப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை.

.[2]

பூதவாதம்

பூதவாதம் (பூதம் + வாதம்) என்பது தமிழரின் தத்துவ மரபு ஆகும். இந்தியத் தத்துவ வரலாற்று மரபு பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் என்னும் இருவகை நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.இதில் பொருள்முதல் வாதத்தினை மையமாகக் கொண்டது பூதவாதம். தத்துவ மரபின் ஊற்றுக்கண் பொருள் முதல் வாதம் எனலாம். பஞ்ச பூதம் தான் உலக, உயிர் உருவாக்கத்திற்கான அடிப்படை மூலம் என்று தமிழ்ச் செவ்வியல் இலக்கியப் பாடல்களின்வழி அறிந்து கொள்ளலாம்.

இந்தியத்தத்துவ ஞானம், இந்தியத் தத்துவக் களஞ்சியம் ஆகிய நூல்களில் பேசப்படும் அவைதீக மரபில் உள்ள உலகாயதம் என்னும் தத்துவ நிலைப்பாடு தமிழில் பூதவாதம் என வழங்கப்பட்டு வந்துள்ளது. மணிமேகலை நூலில் 27 வது காதையான சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் பூதவாதியின் தத்துவ விளக்கத்தினைக் காணலாம்.[3][4]

மேற்கோள்கள்

  1. சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். பக்கங்கள் 28.
  2. சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். தொகுதி 1: பக்கங்கள் 38-39
  3. (பக்.18)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.